உயிர் பத்திக்காம விடமாட்டாளோ!.. வெளியானது 'வா வாத்தியாரே' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்..!

by ramya suresh |
உயிர் பத்திக்காம விடமாட்டாளோ!.. வெளியானது வா வாத்தியாரே படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்..!
X

Actor Karthi: தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்கின்ற திரைப்படத்தில் அறிமுகமாகி பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கின்றார் கார்த்தி. இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கின்றது. தொடர்ந்து கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் கார்த்தி கடைசியாக மெய்யழகன் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

96 திரைப்படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படம் வெளியாகி ரசிகர்களுடைய கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் தோல்வியை தழுவியது.

கார்த்தி லைன் அப்: கங்குவா திரைப்படத்தை முடித்த கையோடு நடிகர் கார்த்தி நளன்குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியாரே என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இதனை தொடர்ந்து மித்ரன் ஜவகர் இயக்கத்தில் சர்தார் 2 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது பாகம் தயாராகி வருகின்றது.

இந்த படத்தை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் டாணாக்காரன் திரைப்படத்தின் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி 29 என்கின்ற திரைப்படத்திலும் தற்போது நடித்து வருகின்றார். சமீபத்தில் இப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. மேலும் இப்படத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.

வா வாத்தியாரே திரைப்படம்: சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தியின் 26 ஆவது திரைப்படமாக உருவாகி இருக்கும் படம் வா வாத்தியாரே. இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடித்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை ஸ்டூடியோவின் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கின்றார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் ராஜ்கிரன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஒரு ஜாலியான போலீசாக நடிகர் கார்த்தி நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் தொடர்பான எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்தது.

வா வாத்தியாரே ஃபர்ஸ்ட் சிங்கிள்: இந்நிலையில் இந்த திரைப்படத்திலிருந்து சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி இருக்கும் 'உயிர் பத்திக்காம' என்கின்ற பாடல் வெளியாகி இருக்கின்றது. காதலர் தினத்தை முன்னிட்டு கார்த்தி மற்றும் கீர்த்தி ஷெட்டியின் காதல் பாடலாக வெளியாகி இருக்கின்றது. சந்தோஷ் நாராயணன் இசையில் முற்றிலும் வித்தியாசமாக உருவாகி இருக்கும் இந்த பாடல் நிச்சயம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story