சிம்புவோட மார்கெட்டே போயிருக்கும்! நல்லவேளை அந்த நடிகர் நடிக்கல.. மாநாடு படத்தில் நடிக்க இருந்த நடிகர்
சிம்புவின் ரீ எண்டிரிக்கு ஒரு காரணமாக அமைந்த திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு பொலிட்டிக்கல் ஆக்சன் திரில்லர் படமாக அமைந்தது தான் இந்த மாநாடு திரைப்படம். இந்த படத்தில் கூடுதல் அம்சமாக பேசப்பட்ட ஒரு விஷயம் என்னவெனில் லூப்பிங் கான்செப்டில் இந்த கதை அமைந்தது. இது ரசிகர்களை மிகவும் கவர்ந்த வண்ணம் இருந்தன.
அதுவரை சிம்பு நடித்த எந்த படமும் மக்கள் மத்தியில் சரியான ஒரு வரவேற்பை பெறாததால் சிம்புவின் மார்க்கெட் மிகவும் குறைந்து இருந்தது. அதன் பிறகு தன் உடல் எடையை குறைத்து ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாநாடு திரைப்படத்தின் மூலம் சரியான கம்பேக் கொடுத்திருந்தார் சிம்பு. படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய நிலையில் 100 கோடி கிளப்பிலும் இந்த படம் இணைந்தது.
பெரிய அளவில் பேசப்பட்ட இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது சிம்புவே இல்லையாம். இதைப் பற்றி வெங்கட் பிரபு ஒரு வீடியோவில் பேசியது இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. கார்த்தியுடன் இணைந்து பிரியாணி என்ற படத்தை எடுத்திருந்தார் வெங்கட் பிரபு. ஆனால் பிரியாணி படம் எடுப்பதற்கு முன்பாக இந்த மாநாடு திரைப்படத்தை தான் கார்த்தியை வைத்து எடுக்க நினைத்தாராம்.
ஆனால் அந்த சமயத்தில் லூப்பிங் கான்செப்ட் இல்லாமல் ஒரு அரசியல் படமாகவே கார்த்தியை வைத்து எடுக்கலாம் என நினைத்திருக்கிறார் வெங்கட் பிரபு. ஆனால் அந்த நேரத்தில் தான் கார்த்தி சகுனி திரைப்படத்தில் நடித்திருந்தார். சகுனி திரைப்படம் ஒரு பொலிடிக்கல் சார்ந்த கமர்சியல் படமாக இருந்தது.
அதனால் ஏற்கனவே பொலிடிகல் கான்செப்டில் நடித்த விட்டதாகவும் இந்த படத்தில் நான் நடிக்க முடியாது எனவும் கார்த்தி கூறிவிட்டாராம். அதன் பிறகு தான் கதையை மாற்றி பிரியாணி என்ற பெயரில் புதிய ஒரு கதையை தயார் செய்து கார்த்தியை நடிக்க வைத்திருக்கிறார். இருந்தாலும் மாநாடு திரைப்படத்தை எப்படியாவது எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்த வெங்கட் பிரபுவுக்கு சிம்பு மனதில் பட சிம்புவை வைத்து அந்த படத்தை எடுத்திருக்கிறார்.படமும் பெரிய அளவில் பேசப்பட்டது.