Categories: Cinema News karuppu movie latest cinema news latest news கருப்பு திரைப்படம் நடிகர் சூர்யா

Karuppu: மீண்டும் ஏழரையை கொடுக்கும் ரஜினி!.. கங்குவா கதைதான் கருப்புக்கும்!.. ஐயோ பாவம் சூர்யா!..

நடிகர் சூர்யாவுக்கு இது போதாத காலம் போல!. சிங்கம் படத்திற்கு பின் தியேட்டர்களில் வெளியான அவரின் எந்த படமும் பெரிய ஹிட் அடிக்கவில்லை. இடையில் சூரரைப் போற்று, ஜெய்பீம் ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும் அவை தியேட்டர்களில் வெளியாகவில்லை. மாறாக ஓட்டியில் வெளியானது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா மிகவும் கஷ்டப்பட்டு நடித்த கங்குவா திரைப்படம் பெரிய அளவில் புரமோஷன் செய்யப்பட்டது. ஆனால் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ரெட்ரோ படமும் பெரிய ஹிட் அடிக்கவில்லை. அதன்பின் தனது உறவினர் எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்கிற திரைப்படத்தில் நடித்தார் சூர்யா. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து சில மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இப்போது வரை ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.

#image_title

படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவுக்கும் ஆர்.ஜே பாலாஜிக்கும் இடையே முதலில் இருந்து ஒத்துவரவில்லை எனவும், கோபத்தில் சில நாட்கள் பாலாஜி ஷுட்டிங்கையும் நிறுத்தியதாக செய்திகள் வெளியானது. அதோடு இன்னும் 15 நாட்கள் ஷூட்டிங் எடுக்க வேண்டி இருக்கிறது எனவும் சிலர் சொல்கிறார்கள். முக்கியமாக இப்படத்தின் ஓடிடி உரிமை இன்னமும் விற்கப்படவில்லை. இந்த படத்தை இந்த வருட தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் இந்த பிரச்சனைகளால் ரிலீஸ் தேதியை முடிவு செய்யமுடியாமல் இருக்கிறார்கள்.

இந்த படத்தை அடுத்த வருடம்தான் ஒளிபரப்ப முடியும் என ஓடிடி நிறுவனங்கள் சொல்லிவிட, படமும் அடுத்த வருடம்தான் வெளியாகும் என்கிற நிலை. ஆனால் பொங்கலுக்கு விஜயின் ஜனநாயகன், சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆகிய படங்கள் வருகிறது. எனவே ஏப்ரல் 14ம் தேதி அதாவது தமிழ் புத்தாண்டுக்கு கருப்பு படத்தை வெளியிட யோசித்தார்கள். ஆனால் ரஜினியின் ஜெயிலர் 2 அந்த தேதியில் வரும் என சொல்லப்பட்டதால் என்ன செய்வது என்று யோசித்து வருகிறார்கள்.

ஏற்கனவே கங்குவா படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பின் அதே தேதியில் ரஜினி தனது வேட்டையன் படத்தை இறக்கினார். எனவே கங்குவா ரிலீஸ் தள்ளிப்போனது. தற்போது கருப்பு படத்தை ரிலீஸுக்கு ஒரு தேதியை குறித்தால் அதே நாளில் ஜெயிலர் 2 வருகிறது.

ஒருபக்கம் இந்த படத்தின் பட்ஜெட் 100 கோடி என சொல்லப்பட்டு 130 கோடி வரை சென்று விட்டதாம். ஹீரோ சூர்யா தனது உறவினர் என்பதால் சொல்லவும் முடியாமல், மெள்ளவும் முடியாமல் இருக்கிறாராம் அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு. அனேகமாக கருப்பு திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் 14க்கு முன்பு வெளியாகும் என கணிக்கப்படுகிறது.

Published by
ராம் சுதன்