Categories: Cinema News latest news

Karuppu: சிக்ஸ் அடித்தாரா சாய் அபியங்கர்?.. காட் மோட் பாடலை வெளியிட்ட படக்குழு!

Karuppu: தீபாவளி தினத்தை முன்னிட்டு சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் கருப்பு திரைப்படத்தின் சிங்கிள் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்னர் விஜய் மற்றும் அஜித்துக்கே போட்டியாக இருந்தவர் சூர்யா. ஆனால் அவர் திடீரென பாலிவுட் பக்கம் படையெடுக்க கோலிவுட் மீதான ஆர்வம் அவருக்கு குறைந்தது. இதனால் அவரின் ரசிகர்களும் மறந்தனர். 

பெரிய இடைவேளைக்கு பின்னர் கங்குவா படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார். பாகுபலி லெவலில் யோசித்து பல திரையரங்குகளில் ரிலீஸ் செய்த படக்குழுவிற்கு பெரிய அளவில் ஏமாற்றமே மிஞ்சியது. படம் மிகப்பெரிய தோல்வியை தழுவி அதிர்ச்சி கொடுத்தது.

தொடர்ந்து, கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்தார். ஆஹாஓஹோ என படம் ஹிட்டடிக்கும் என இங்கும் எதிர்பார்ப்பு இருக்க படம் மீண்டும் பாதாளத்தில் சறுக்கியது. இனிமேல் பிரபல இயக்குனர்களை நம்பி பயனில்லை என முடிவெடுத்தார். 

மலையாள இயக்குனர்களும், அறிமுக இயக்குனர்களின் பக்கம் சூர்யா பார்வை திரும்பியது. அதிலும் இதுவரை ஒன்று, இரண்டு படங்களை இயக்கி இருக்கும் ஆர்.ஜே.பாலாஜியை தன்னுடைய அடுத்த படத்தின் இயக்குனராக ஒப்பந்தம் செய்தார். 

இந்த முடிவே சூர்யாவின் கோலிவுட் கேரியருக்கு மேலும் வலு சேர்த்தது. அந்த வகையில் இந்த கூட்டணியில் கருப்பு திரைப்படம் உருவாகி வருகிறது. திரிஷா ஜோடியாக நடிக்க வில்லனாக ஆர்.ஜே.பாலாஜியே நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

ஆல்பம் சாங் மூலம் ஹிட்டடித்த சாய் அபியங்கர் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். சமீபத்தில் இவர் இசையில் டியூட் படம் வெளியாகி இருந்தது. ஊரும் பிளட் என்ற பாடலை தவிர மற்ற பாடல்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. 

இந்நிலையில் காட் மோட் என்ற ஒற்றை பாடலை தீபாவளி ஸ்பெஷலாக படக்குழு ரிலீஸ் செய்துள்ளது. எப்போதும் போல இல்லாமல் லவ் மோடில் இல்லாமல் ஹீரோ எண்ட்ரி பாடலாக அமைக்கப்பட்டுள்ளது. சாய் அபியங்கர் ரசிகர்களுக்கு இது வித்தியாச ட்ரீட் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

Published by
ராம் சுதன்