Categories: latest news

காதலிக்க நேரமில்லை படத்துல இவ்ளோ விஷயம் இருக்கா? இயக்குனர் சொன்ன ‘வாவ்’ தகவல்

தமிழ்த்திரை உலகில் காலத்தால் அழியாத பல சூப்பர்ஹிட் படங்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் காதலிக்க நேரமில்லை. தற்போது கிருத்திகா உதயநிதி இதே பெயரில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். ஜெயம் ரவி, நித்யா மேனன், யோகிபாபு, வினய் ராய் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசை அமைத்தவர் ஏ.ஆர்.ரகுமான். இக்கால இளசுகளுக்கு ஏற்ற வகையில் காதல் படமாக உருவாகி உள்ளது. வரும் பொங்கல் தினத்தன்று படம் வெளியாக உள்ளது.

ஆனால் முதன்முறையாக இந்தப் பெயரில் படத்தை இயக்கியவர் ஸ்ரீதர். இவர் 1964ல் இயக்கத்தில் ரவிச்சந்திரன், ராஜஸ்ரீ, காஞ்சனா, முத்துராமன், பாலையா, விஎஸ்.ராகவன், நாகேஷ், சச்சு உள்பட பலரது நடிப்பில் வெளியான படம் காதலிக்க நேரமில்லை. இந்தப் படத்தில் தான் கதாநாயகன் ரவிச்சந்திரன் அறிமுகம் ஆனார்.

எம்எஸ்வி. இசையில் பாடல்கள் எல்லாமே அருமையாக இருந்தன. இளம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை மறைந்த இயக்குனர் மனோபாலா ரீமேக் செய்ய ஆசைப்பட்டார். அதற்கான உரிமையையும் வாங்கினார். அதன்பிறகு நடந்தது என்னன்னு பாருங்க.

ஸ்ரீதர் இயக்கிய காதலிக்க நேரமில்லை படம் அந்தக் காலத்தில் கல்லூரி இளைஞர்கள் மிகவும் ரசித்துப் பார்த்த படம். இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியவர் இயக்குனர் மனோபாலா. படத்தின் இயக்குனர் ஸ்ரீதரைப்; பார்க்கச் சென்றாராம் இயக்குனர் மனோபாலா.

அவருக்கு படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியதற்கு ஸ்ரீதர் வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறார். தொடர்ந்து நடிகர்களைத் தேர்வு செய்து விட்டாயா என்று கேட்டுள்ளார். அதற்கு மனோபாலா அன்றைய காலத்தில் பிரபலமாக இருக்கும் இளம் நடிகர்களின் பெயர்களை வரிசையாக சொன்னாராம். உடனே அவரைத் தடுத்த ஸ்ரீதர், ‘எல்லாம் சரி. பாலையா கேரக்டருக்கு யாரைப் போடப் போறே’ன்னு கேட்டுள்ளார்.

இதைக் கேட்டதும் ஸ்ரீதரின் முன் இருந்து மனோபாலா யோசித்துக் கொண்டே இருந்தாராம். ஆனால் பாலையா கேரக்டருக்குப் பொருத்தமாக நடிக்க யாருமே அவருக்குத் தோன்றவில்லையாம். உடனே அவர் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு ரீமேக் உரிமையை திரும்பவும் அவரிடமே கொடுத்து விட்டு வந்தாராம்.

sankaran v

Recent Posts

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

28 minutes ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

58 minutes ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

3 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

6 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

18 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

19 hours ago