தமன்னா கிட்ட போட்டி போட முடியுமா? திடீரென டிரெண்டாகும் காவாலா சாங்..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:38:14  )

ரஜினியின் நடிப்பில் நேற்று முன் தினம் ரிலீஸான திரைப்படம் வேட்டையன். படத்தை தச ஞானவேல் இயக்கினார். படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மஞ்சுவாரியார் நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து அமிதாப் பச்சன், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஷயன் போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். படம் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

ஆரம்பத்தில் வேட்டையன் படத்தின் மீது எந்தவித ஹைப்பும் இல்லாத நிலையில் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. ஏற்கனவே இந்தியன் 2 படத்திற்காக அனிருத் போட்ட பாடல் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. அதனால் வேட்டையன் படத்திற்கும் எப்படி பாடல் அமைத்திருக்கிறாரோ என்ற பயம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

ஆனால் முதல் சிங்கிளான மனசிலாயோ பாடல் வெளியாகி மாபெரும் ஹிட்டானது. தமிழ் சினிமாவில் மனசிலாயோ பாடலுக்கு தான் ரசிகர்கள் அதிகளவு ரீல்ஸ் போட்டு கொண்டாடி வருகிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. அந்தளவுக்கு பாடலில் மஞ்சு வாரியரின் டான்ஸ் கவர்ந்தது. அவருடைய டான்ஸில் ஒரு கிரேஸ் இருந்தது என்று சொல்லலாம்.

பல மில்லியன் வீயூவ்ஸ்களை தாண்டி பாடல் பெரிய ரீச்சை அடைந்தது. இந்த நிலையில் திடீரென ஜெயிலர் படத்தில் அமைந்த காவாலா பாடலும் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி வருகின்றது. அந்தப் பாடலுக்கு தமன்னா மிகவும் க்ளாமராக உடை அணிந்து ஆடிய ஆட்டம் உலகெங்கிலும் உள்ள தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

இந்தளவுக்கு தமன்னா ஆடுவாரா என்று பிரமிக்க வைத்தார். இந்த நிலையில் காவாலா சாங் 250 மில்லியன் வியூவ்ஸ்களை தாண்டி இன்னும் பாடல் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படுவதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த காவாலா பாடலுக்குத்தான் அதிக பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story