அமரன் சிவகார்த்திகேயனுக்கு சமாதிதான் போல!.. கவினோட ப்ளடி பெக்கர் டீசர் பார்த்தீங்களா!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:40:01  )

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சினிமாவில் இருந்து அரசியலுக்கு செல்ல உள்ள நிலையில், நடிகர் அஜித்தும் கார் ரேஸ் உள்ளிட்ட விஷயங்களில் அதிக அளவில் ஈடுபாடு காட்டி வருகிறார். கோலிவுட்டின் வருங்காலம் யார் என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயம் ரவியின் பிரதர், சிவகார்த்திகேயனின் அமரன் மற்றும் கவின் நடித்துள்ள ப்ளடி பெக்கர் உள்ளிட்ட மூன்று படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளன.

விஜய் டிவியில் இருந்து வந்த சிவகார்த்திகேயன் மற்றும் கவின் இடையே பலமான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜேஷ் எம் இயக்கத்தில் வெளியான படங்களில் சிவா மனசுல சக்தி மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களைத் தவிர மற்ற அனைத்து படங்களும் சொதப்பி விட்டன. விவாகரத்து சர்ச்சையில் சிக்கியுள்ள ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படம் ரசிகர்களை எந்த அளவுக்கு கவரும் என்பது கேள்விக்குறிதான்.

கமலஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ள நிலையில், அந்த படத்தின் கிளைமாக்ஸில் சிவகார்த்திகேயன் செத்து விடுவார் என்பது தெரிந்து விட்ட நிலையில், ரசிகர்கள் எந்த அளவுக்கு அந்த படத்திற்கு வரவேற்பு கொடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த ஆண்டு தீபாவளிக்கு ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கப் போவது நெல்சன் தயாரிப்பில் சிவபாலன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ப்ளடி பெக்கர் திரைப்படம் தான் என இந்த படத்தின் டீசரை பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆட்டோகாரனிடம் சிக்னலில் பிச்சை எடுக்கும் கவின் எனக்கு மட்டும் கால் இருந்தால் என சொல்ல ஆட்டோகாரன் காசு கொடுக்கிறார். சாவு ஊர்வலத்தை பார்த்துவிட்டு கவின் அதன் அருகே போய் எழுந்து நின்று ஆட்டம் போடும் காட்சி தற்போது டீச்சராக வெளியாகியுள்ளது.

விரைவில் டிரைலர் ரிலீசாக உள்ள நிலையில் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என கவின் அறிவித்துள்ளார். நெல்சன் தயாரிப்பு என்பதால் நிச்சயம் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பது கன்ஃபார்ம் என கூறுகின்றனர்.

ராணுவ அதிகாரியாக சிவகார்த்திகேயன் தீவிரவாதிகளை சுட்டுக் கொள்வதும், தீவிரவாதிகளை பிடிக்கும் பேட்டையில் சுட்டுக் கொல்லப்படுவதும் தான் அந்த படத்தின் கதை என்பதால் தீபாவளிக்கு எந்த படம் ஓட போகிறது என்பதை காத்திருந்து பார்ப்போம்.

இந்த ஆண்டு மே 10 ஆம் தேதி வெளியான கவிஞன் ஸ்டார் படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு படம் வேற லெவலில் இருக்கப்போகிறது என பலரும் எதிர்பார்த்த நிலையில், கவின் படத்தை விட சமீபத்தில் வெளியான ஹரிஷ் கல்யாணி ரப்பர் பந்து திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது குறிப்பிடத்தக்கது.

Next Story