Bloody beggar: விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்த சிலர்களில் கவினும் ஒருவர். சின்ன சின்ன வேடங்களில் நடித்துவிட்டு லிப்ட், டாடா, ஸ்டார் என டேக் ஆப் ஆனவர். இவர்தான் அடுத்த விஜய் என பில்டப் செய்யும் அளவுக்கு ஸ்டார் படத்தின் புரமோஷன் இருந்தது. இப்போது நெல்சனின் தயாரிப்பில் அவரின் உதவியாளர் சிவபாலன் இயக்கியிருக்கிறார்.
நெல்சனை போலவே ஒரு டார்க் காமெடி படமாக பிளடி பெக்கர் உருவாகியுள்ளது. இந்த படத்தில் பிச்சைக்காரனாக நடித்திருக்கிறார் கவின். ஏற்கனவே இப்படத்தின் டிரெய்லர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோக்கள் வெளியாகி படத்தின் மீது எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோக்களை பார்க்கும் போது படம் செம ஃபன்னாக இருக்கும் என நம்பப்படுகிறது.
இந்நிலையில், இந்த திரைப்படம் இன்று காலை 9 மணிக்கு தமிழகத்தில் வெளியானது. ஆனால், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் படம் அதிகாலையிலேயே வெளியானது. எனவே, படம் பார்த்த பலரும் படம் எப்படி இருக்கிறது என டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
இது கவினின் தீபாவளி ட்ரீட்.. சைலண்ட் சம்பவம் என சிலர் பதிவிட்டு வருகிறார்கள். புதுமையான டார்க் காமெடி திரில்லர் படமாக வந்திருக்கிறது பிளடி பெக்கர். எதிர்பார்க்க முடியாத டிவிஸ்ட் மாற்றும் உணர்பூர்வமான காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது. கவின் சிறப்பாக நடித்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் படத்தின் வெற்றிக்கு உதவியிருக்கிறார்கள். பாடல் பெரிதாக ஈர்க்கவில்லை. பிளடி பெக்கர் மற்றும் அமரன் இரண்டு படங்கள் மட்டுமே தீபாவளி வின்னர்’ என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.
இன்னும் சிலரோ அமரன் படம் நன்றாக இருந்தாலும் சீரியஸான படமாக இருக்கிறது. ஆனால், பிளடி பெக்கர் தீபாவளிக்கு குடும்பத்துடன் சென்று தியேட்டரில் ஜாலியாக பார்க்கும் படமாக வந்திருக்கிறது. ஏ,பி,சி என எல்லா செண்ட்டரிலும் இந்த படம் ஓடும் என சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.
படத்தின் முன் பாதியில் ஒரு ஜாலியான பிச்சைககாரனாகவும், இரண்டாம் பாதியில் ஒரு அப்பாவி பையனாகவும் அசத்தலாக நடித்திருக்கிறார். இது சினிமா மீதான உங்களின் அர்ப்பணிப்பை காட்டுகிறது’ என ஒருவர் பதிவிட்டிருக்கிறார். மொத்தத்தில் தீபாவளிக்கு வெளியான படங்களில் ஒரு ஜாலியான படமாக பிளடி பெக்கர் வெளிவந்திருக்கிறது.
தமிழ் சினிமாவில்…
கங்குவா திரைப்படம்…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை…
இட்லி கடை…
கங்குவா படத்தின்…