அடுத்த விஜய் சேதுபதியாகும் கவின்… சும்மா இல்லாம மொத்தமா மாட்டிக்க போறாரு?

by ராம் சுதன் |

Kavin: சின்னத்திரையில் நடித்து வந்த கவின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார். தற்போது அவர் கைவசம் எக்கச்சக்க படங்கள் குவிந்திருக்கும் நிலையில் விஜய் சேதுபதி ரூட்டை பிடித்து இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையனாக நடித்து புகழ் பெற்றவர் கவின். இடைத்தொடர்ந்து அவருக்கு பிக் பாஸ் தமிழ் சீசன் 3ல் கலந்து கொள்ள வாய்ப்பு அமைந்தது. அதில் உள்ளே சென்ற கவின் தனக்கென ஒரு டீமை உருவாக்கினார்.

மிகப்பெரிய அளவில் நெகடிவ் விமர்சனங்கள் அவருக்கு புரிந்தாலும் எக்கச்சக்கமான ரசிகர்களும் அமைந்தனர். கிட்டத்தட்ட அந்த சீசனின் டைட்டில் வின்னராக மாறுவார் என பலர் எதிர்பார்த்தனர். ஆனால் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு கவின் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இதை தொடர்ந்து அவருக்கு தொடர்ச்சியாக சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இதில் கவின் அடிப்படையில் வெளியான லிஃப்ட், டாடா உள்ள திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த தீபாவளி ரேஸில் வெளியாகி இருக்கும் பிளடி பெக்கர் கவலையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து கவின் நடிப்பில் தற்போது எக்கச்சக்கமான திரைப்படங்கள் தயாராகி வருகிறது. கிராஸ் ரூட் நிறுவனத்தின் மூலம் வெற்றிமாறன் தயாரித்து வரும் திரைப்படம் மாஸ்க். படத்தில் ஆண்ட்ரியா உடன் இணைந்து கவின் நடித்து வருகிறார்.

கோரியோகிராபர் சதீஷ் இயக்கும் படத்திலும், பிரின்ஸ் பிக்சர்ஸ் படத்திலும் நடித்து வருகிறார். விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாராவுடன் கவின் ஜோடியாக ஹாய் படத்திலும் நடித்து வருகிறார். இப்படங்களின் ஷூட்டிங் எல்லாமே பிப்ரவரி அல்லது மார்ச்சில் முடிந்து விடும் எனக் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்து கொண்டிருந்த பொழுது நடிகர் விஜய் சேதுபதி ஒரே வருடத்தில் ஆறுக்கும் அதிகமான திரைப்படங்களை நடித்து வந்தார். இதனால் அவருடைய வெற்றி படங்கள் கூட பெரிய அளவில் வரவேற்பு பெறாமல் அடிபட்டது. தற்போது அதே தவறை நடிகர் கவினும் செய்து வருவதாகவும் பேச்சுக்கள் அடிப்பட தொடங்கி இருக்கிறது.

Next Story