பிளடி பெக்கர் படத்தில் இது கண்டிப்பா நடக்காது… கவினுக்கு ஷாக் கொடுத்த படக்குழு

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:36:05  )

Kavin: தமிழ் சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான கவின் தற்போது தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக ஹிட் படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் பிளடி பெக்கர் படத்தின் சுவாரஸ்ய அப்டேட் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக லிப்ட் தொடங்கி ஸ்டார் படம் வரை சுமார் வெற்றியை பெற்று வருபவர் நடிகர் கவின். தற்போது கவினின் நடிப்பில் பிளடி பெக்கர் திரைப்படம் தற்போது தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இப்படத்தின் புரோமோஷன்கள் பணிகளும் நடந்து வருகிறது.

இயக்குனர் சிவபாலன் இயக்கி வரும் இப்படத்தில் கவினுடன், ரெடின் கிங்ஸ்லி, விஷவ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். எதிர்பாராத நிகழ்வால் மாறும் ஒரு பிச்சைக்காரனின் வாழ்க்கையைப் பற்றிய படம் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் ப்ரோமோ மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் சிவகார்த்திகேயனின் 'அமரன்' மற்றும் ஜெயம் ரவியின் 'பிரதர்' ஆகிய படங்களுடன் பிளடி பெக்கர் மோத இருப்பதால் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

மேலும் மூன்று வெவ்வேறு ஜானர் படங்களின் மோதல் பட விரும்பிகளை பிஸியாக்க வாய்ப்புள்ளது. பிச்சைக்காரனின் தோற்றத்தைத் தவிர,

கவினுக்கு படத்தில் இன்னும் ஒரு தோற்றம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. பிளடி பெக்கரில் ஒரு விண்டேஜ் இணைப்பு உள்ளது. பெரும்பாலான கதாபாத்திரங்கள் ரெட்ரோ பாணியில் நடந்து கொள்ள இருப்பார்களாம்.

படத்தில் கவின் ஜோடி இல்லை. ஆனால் படத்தில் ஒரு காதல் பக்கம் இருக்கும் என்றும் அதற்காக, அக்ஷயா ஹரிஹரன் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Next Story