கவின்- நயன் இணையும் படத்திற்கும் இங்கிலீஷ் பெயர்தான்.. சம்பவம் பண்ணிட போறாங்க..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:33:15  )

Kavin: சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு வந்து பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் கவின் தற்போது நயன்தாராவுடன் நடிக்க இருக்கும் திரைப்படத்திலும் எப்போதும் போல ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சின்னத்திரையில் சீரியலில் பிஸியாக நடித்து வந்தவர் கவின். அவர் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார். ரசிகர்களிடம் விமர்சனத்தை குவித்தாலும் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றதும் கவின்தான்..

டைட்டிலை தட்டிச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினார். இதைத்தொடர்ந்து அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் ஏராளமாக புதிய தொடங்கியது. அதிலும் சமீபத்திய காலமாக கவின் கைவசம் எக்கச்சக்க திரைப்படங்கள் குவிந்திருக்கிறது.

வரும் தீபாவளி தினத்தில் நெல்சன் தயாரித்து கவின் நடித்திருக்கும் பிளடி பெக்கர் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இது மட்டுமல்லாமல் கிஸ் திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இது மட்டுமல்லாமல் நடிகர் நயன்தாராவுடன் ஒரு படத்தில் இணைந்து நடித்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனரான விஷ்ணு எடவன் இயக்கத்தில் இருவரும் இணைந்து நடிக்க இருக்கின்றனர். இருவருக்கும் இடையேயான காதல் கதையை சம்பந்தப்படுத்தி படம் அமைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் தற்போது இப்படத்திற்கு ஹாய் என டைட்டில் வைக்கப்பட இருப்பதாகவும் தகவல் கசிந்து இருக்கிறது. பொதுவாக நடிகருக்காக தன்னுடைய லிப்ட் திரைப்படத்திலிருந்து ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்ட படத்தில் மட்டுமே எடுத்து வருகிறார்.

டாடா, ஸ்டார் எனத் தொடங்கி தற்போது பிளடி பெக்கர் என இதே பார்மெட்டை கவின் பாலோ செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவரின் அடுத்த திரைப்படம் ஆங்கில பெயர் தான் என்பது வித்தியாசமாக பார்க்கப்பட்டு வருகிறது.

Next Story