பிரபல ஹீரோயின் இயக்கத்தில் கவின்… இது நல்ல காம்போவா இருக்கே? இவங்களா தெரிதா..

by ராம் சுதன் |
பிரபல ஹீரோயின் இயக்கத்தில் கவின்… இது நல்ல காம்போவா இருக்கே? இவங்களா தெரிதா..
X

Kavin: பிரபல சின்னத்திரை நடிகராக இருந்து வந்த கவின் தற்போது கோலிவுட்டில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். ஏற்கனவே பல படங்களை கைவசம் வைத்திருக்கும் கவின் தற்போது இன்னொரு படத்தையும் ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

சின்னத்திரையில் ஹிட் அடித்து வந்த கவின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பிறகு லிப்ட் திரைப்படத்தில் நடித்தார். அப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்புகளும் குவித்தது. அதைத் தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.

இதைத் தொடர்ந்து நடிகர் கவினுக்கு வரிசையாக வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது கிஸ், ஹாய் உள்ளிட்ட திரைப்படங்களின் நடித்து வரும் கவின் அடுத்து நடிக்க போகும் திரைப்படம் குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சமீபத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த லப்பர் பந்து திரைப்படத்தில் நடித்த நடிகை சஞ்சனா இயக்கத்தில் அடுத்து கவின் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சஞ்சனா தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.

மேலும் இதற்கு முன்னர் தமிழில் வெளியான வதந்தி வெப்சீரிஸில் ஹீரோயினாக நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. சஞ்சனா கோலிவுட்டிற்குள் வரும்போது இயக்குனர் ஆசையில்தான் உள்ளே வந்திருக்கிறார். ஆனால் அவருக்கு எதேர்ச்சையாக ஹீரோயின் வாய்ப்புகள் கிடைக்க அதை பயன்படுத்திக் கொண்டாராம்.

தற்போது அவருக்கு சரியாக திரைப்பட வாய்ப்பு அமைய தன்னுடைய இயக்குனர் கனவை நிறைவேற்றிக் கொள்ள முடிவெடுத்து அந்த பணியில் இறங்கிவிட்டாராம். இப்படத்தின் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்திருக்கும் நிலையில், விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது,

Next Story