Connect with us

Cinema News

கீர்த்தி சுரேஷ் மஞ்சள் கயிறுக்கு விடுதலை கொடுக்க போறாங்களாம்? தேதியே குறிச்சாச்சு…

Keerthy Suresh: நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் திருமணம் முடிந்து தன்னுடைய தாலி கயிற்றுடன் பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷன்களுக்கு வலம் வந்து கொண்டிருந்தார். தற்போது அந்த கயிற்றுக்கு விடுதலை கொடுக்க இருப்பதாக தெரிவித்திருக்கும் விஷயம் நடந்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் ரஜினி முருகன் திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் புகழ்பெற்றவர் கீர்த்தி சுரேஷ். இதைத்தொடர்ந்து அவருக்கு கோலிவுட்டில் நிறைய வாய்ப்புகள் குவிந்து வந்தது. நடிகர் விஜய்யுடன் சர்க்கார் திரைப்படத்தில் ஜோடியாக நடித்த மேலும் புகழடைந்தார்.

இதை தொடர்ந்து தன்னுடைய கேரக்டர் ரோல்களில் நடிக்க ஆர்வம் காட்டி வந்தார். அந்த வகையில் மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து தேசிய விருது வாங்கியதும் கீர்த்தி சுரேஷ் கேரியரில் மிகப்பெரிய வளர்ச்சியை அவருக்குப் பெற்றுக் கொடுத்தது.

தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் திடீரென தன்னுடைய பதினைந்து வருட காதலர் ஆண்டனி தொட்டிலை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்தார். இவர்களின் திருமணம் கோவாவில் நெருங்கிய வட்டாரம் சூழ நடந்தது. முதலில் ஹிந்து முறைப்படியும் பின்னர் கிறிஸ்துவ முறைப்படியும் இரண்டு முறை இத்தம்பதி திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர்.

மற்ற நடிகைகள் திருமணம் முடிந்த கையோடு பட ப்ரோமோஷன் உங்களுக்கு வரும்போது கழுத்தில் தாலி இல்லாமல் வருவதை தான் பார்த்திருக்கிறோம். ஆனால் முதல் முறையாக நடிகை கீர்த்தி சுரேஷ் மஞ்சள் கயிற்றுடன் வெஸ்டர்ன் உடையில் பாலிவுட் திரைப்படமான பேபி ஜான் பட ப்ரோமோஷனில் கலந்து கொண்டார்.

தொடர்ந்து அதுபோலவே கீர்த்தி சுரேஷ் வந்தபோது அவருக்கு பலரிடம் பாராட்டுக்கள் இருந்தாலும் திருமணம் ஆன உடன் இன்னொரு நடிகருடன் இப்படி ஜோடியாக மஞ்சள் கயிறுடன் போஸ் கொடுப்பது அநாகரீகமாக இருப்பதாகவும் சிலர் விமர்சனம் செய்தனர்.

இது குறித்து கீர்த்தி சுரேஷ் இடம் கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. அதற்கு பதில் அளித்தவர், ’திருமணம் முடிந்து மூணு வாரங்கள் கழித்தும் நான் மஞ்சள் கயிறுடன் இருப்பது குறித்த கேள்வி எழுந்து வருகிறது. ஆனால், குறிப்பிட்ட காலம் வரை கயிற்றை அகற்றக்கூடாது என்பதால் கயிறுடன் இருக்கிறேன்.

வரும் ஜனவரி கடைசி வாரத்தில் நல்ல நாள் வருவதால் அப்பொழுது கயிற்றை மாற்றி கொள்வேன். தாலி அணிவது எனக்கு மகிழ்ச்சி அளித்து இருக்கிறது. இது சக்தி வாய்ந்ததாகவும் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top