தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, கன்னடம் ,ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரு டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். விஜய், விக்ரம், ரஜினி என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ் வுமென் செண்ட்ரிக் படத்திலும் நடித்து வருகிறார்.
இவருக்கு என சினிமாவில் ஒரு தனி மரியாதையே இருந்து வருகிறது. தற்போது ஹிந்தியில் வருண் தவானுடன் இணைந்து தெறி பட ரீமேக்கில் நடித்து வருகிறார் கீர்த்தி. மேலும் இவரின் நடிப்பில் ரகு தாத்தா திரைப்படமும் வருகிற 15 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கின்றது. ரகு தாத்தாவை பொறுத்தவரைக்கும் படமுழுக்க காமெடி கலந்த திரைப்படமாக அமைந்திருக்கிறது.
அதனால் அந்தப் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. படத்தின் ப்ரோமோஷனுக்காக ஆங்காங்கே பல ஊர்களுக்கு சென்று வருகிறார் கீர்த்தி. இந்த நிலையில் தேசிய விருது பெற்ற நடிகையாக திகழும் கீர்த்தி விஜயுடன் சேர்ந்து இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
ஆனால் அஜித்துடன் ஒரு படத்தில் கூட நடிக்க வில்லை. ஆனால் அஜித்தை ஒரு முறைதான் பார்த்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அது சம்பந்தமான ஃப்ளாஷ்பேக் ஒன்றையும் சமீபத்தில் ஒரு பத்திரிக்கை பேட்டியில் கீர்த்தி சுரேஷ் கூறியிருக்கிறார்.
அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ராமோஜி ராவ் பிலிமி சிட்டியில் நடந்துக் கொண்டிருந்ததாம். அப்போதுதான் அதே பிலிம் சிட்டியில் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பும் நடந்து கொண்டிருந்ததாம். அதனால் அஜித்தை சந்திக்க வேண்டும் என நினைத்த கீர்த்தி சுரேஷ் அங்கு சென்று அஜித்தை பார்த்து அவரை அறிமுகம் செய்து கொண்டாராம்.
ஷாலினி சிறுவயதாக இருக்கும் போது கீர்த்தி சுரேஷின் அம்மாவுடன் ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறாராம். அதனால் இன்று வரை கீர்த்தி சுரேஷின் அம்மாவும் ஷாலினியும் டச்சிலேயே இருக்கிறார்கள் என்றும் அஜித்துடன் சேர்ந்து வொர்க் பண்ண வேண்டும் என்றும் கீர்த்தி சுரேஷ் கூறியிருக்கிறார்.