வாரிசு படத்தில் அந்த முடிவை எடுக்க குஷ்பு தான் முக்கிய காரணமா? என்ன நடந்துச்சு தெரியுமா?
விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த வாரிசு திரைப்படத்தில் குஷ்பு நடிக்க இருக்கிறார் என போஸ்டர்கள் வெளியான நிலையில், படத்தில் ஒரு காட்சியில் கூட அவர் இல்லாமல் போனது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
பெரும்பாலும் சினிமாக்களில் இயக்குனர்கள் நிறைய காட்சிகளை எடுத்துவிட்டு அதை எடிட்டிங்கில் குறைத்துக் கொள்வார்கள். ஒரு சில இயக்குனர்கள் இரண்டு மணி நேரத்திற்கு அதிகமாகவே தேவையில்லாத காட்சிகளை எடுத்து இருப்பார்கள். ஆனால் இன்னொரு சிலரோ சில நிமிடங்கள் மட்டுமே அதிகமாக வைத்திருப்பார்கள்.
இதனால் கேரக்டர் நடிகர்கள் படம் ரிலீசானால் மட்டுமே அதில் தாங்கள் இருக்கிறோமா? இல்லையா என்பதை தெரிந்து கொள்ள முடியும். ஆனால் வாரிசு திரைப்படத்தில் குஷ்புவே இல்லாமல் போனது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. முதலில் போஸ்டரில் விஜய், ராஷ்மிகா மற்றும் குஷ்பு இருந்தனர்.
இதனால் இப்படத்தில் குஷ்புவிற்கு முக்கிய கேரக்டர் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தில் அவர் காட்சிகள் ஒன்று கூட இல்லை. படத்தின் முக்கிய கதையுடன் சம்பந்தப்படாமல் குஷ்புவின் காட்சிகள் அமைந்திருந்தது. நீளத்தை கருத்தில் கொண்டு காட்சிகளை வெட்ட வேண்டிய நேரத்தில் குஷ்புவின் சில காட்சிகளை மட்டுமே வெட்டுவதாக வம்சி முடிவு எடுத்திருந்தார்.
ஆனால் இதை குஷ்புவிடம் சொன்னபோது, வேண்டாம் மொத்தமாக கேரக்டரையே எடுத்து விடுங்கள் எனக் கூறியிருக்கிறார். விஜய் உடனே சம்பந்தப்பட்டு வரும் கேரக்டர் என்பதால் சின்ன காட்சியில் முடிக்க முடியாது. இதனைத் தொடர்ந்து குஷ்புவின் காட்சிகள் மொத்தமாக நீக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இருந்தும் குஷ்பு தன்னுடைய கேரக்டர் குறித்து எங்கும் பேசக்கூடாது. அது முடிந்த கதையாகவே இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறாராம். இப்படத்தில் விஜயுடன் சரத்குமார், ஷியாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். படம் சுமாரான வரவேற்பு பெற்று இருந்தாலும் 300 கோடி அளவில் வசூல் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.