கிரீடம் படத்தின் கிளைமேக்ஸ் ஒரிஜினல் இல்லையா? கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்… வைரலாகும் வீடியோ!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:39:41  )

Kireedam: அஜித் நடித்த மாஸ் ஹிட் திரைப்படமாக வெளியான கிரீடம் திரைப்படத்தின் ஒரிஜினல் கிளைமாக்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இயக்குனர் பிரியதர்ஷினின் உதவி இயக்குனராக இருந்த ஏ எல் விஜய் கோலிவுட்டில் இயக்குனராக கிரீடம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அஜித் குமார், திரிஷா, ராஜ்கிரண், சரண்யா மற்றும் விவேக் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய வேடம் ஏற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பு செய்திருந்தார். மலையாளத்தில் வெளியான படத்தின் ரீமேக் ஆக தான் கிரீடம் உருவானது. முதற்கட்டத்தில் இப்படத்திற்கு மகுடம் என பெயர் வைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னரே கிரீடம் என அது மாற்றப்பட்டது.

இப்படத்தில் அஜித் குமார் சண்டைக் காட்சிகளுக்கு மிகுந்த சிரமம் எடுத்து நடித்திருந்தார். அதுபோலவே ஜிவி பிரகாஷ் இசை ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இருக்கும் எல்லா பாடல்களுமே நா முத்துக்குமார் தான் எழுதியிருந்தார்.

2007 ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி படம் திரைக்கு வந்தது. அப்பா மற்றும் மகன் இருவருக்கும் இடையேயான பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது. முதலில் இப்படத்திற்கு பாஸ்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் ரசிகர்கள் கிளைமாக்ஸை விரும்பவில்லை.

தற்போது இருக்கும் படத்தின் கிளைமாக்ஸ்சில் அஜித் குமார் காவல்துறை அதிகாரியாக வர அவருக்கு அப்பாவான ராஜ்கிரண் சல்யூட் அடிப்பார். ஆனால் அது உண்மையான கிளைமாக்ஸ் கிடையாதாம். தன்னுடைய குடும்பத்தின் மீது பாசம் வைத்திருந்த நாயகன் ரவுடிகளை அடித்து துவம்சம் செய்த பின்னர் தன் தந்தையை பார்த்து ரோட்டில் அமர்ந்து கதறி அழுவதுதான் முதலில் கிளைமேக்ஸாக இருந்திருக்கிறது.

ஆனால் அஜித் குமாரின் ரசிகர்கள் இதை பெரிதாக விரும்பவில்லை. அதனால் இப்படியே படத்தை தொடர்ந்து ஒளிபரப்பினால் அது வசூலில் பெரிய இடியாக இறங்கும் என்பதால் தற்போது இருக்கும் கிளைமேக்ஸ் மாற்றி அமைத்து இருக்கின்றனர். அதை தொடர்ந்த படம் பல நாட்களை தாண்டி சூப்பர் ஹிட் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Next Story