இவரு என்ன இங்கயே தங்கிட்டாரு… குட் பேட் அக்லியில் இணைந்த சூப்பர் பிரபலம்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:40:06  )

Good bad ugly: அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் இணைந்திருக்கும் முக்கிய பிரபலம் குறித்த சுவாரசிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

விடாமுயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங் முடித்திருக்கும் நடிகர் அஜித்குமார் தன்னுடைய அடுத்த படத்தில் பிஸியாகி இருக்கிறார். மார்க் ஆண்டனி இன் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி.

இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருக்கிறார். படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அஜித்குமார் உடன் மீண்டும் நடிகர் திரிஷா ஜோடியாக நடித்தார். இப்படத்தின் சூட்டிங் தற்போது ஸ்பைனில் நடப்பதாக கூறப்படுகிறது.

இதுவரை அஜித் நடிக்காத கதாபாத்திரத்தில் தான் இப்படத்தில் நடித்து வருகிறாராம். கடந்து சில வருடங்களாக அஜித் செய்யாத சிலவற்றை இப்படத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் முயற்சி செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் பல முன்னணி பிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நிறுவனத்தால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தற்போது இப்படத்தில் நடிகர் சுனில் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சமீப காலங்களாகவே நடிகர் சுனில் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு மாவீரன், ஜெய்லர், மார்க் ஆண்டனி உள்ளிட்ட தமிழ் படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

குட் பேட் அக்லி படத்தில் சுனில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அஜித்துடன் இவர் வரும் காட்சிகள் கண்டிப்பாக தியேட்டர் அதிரும் வகையில் அமைந்திருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

Next Story