இதுக்கு அந்த டேக் லைன்னு இப்போதான் தெரியுது! ‘கொம்புசீவி’ படத்தின் கதையே இதானா?

Published on: November 7, 2024
---Advertisement---

பொன்ராம் இயக்கத்தில் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் திரைப்படம் கொம்புசீவி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சமீபத்தில்தான் படத்தின் போஸ்டர் வெளியாகி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் சரத்குமாரும் நடிக்கிறார். கையில் வேலுடனுடன் துப்பாக்கியுடனும் சண்முகப்பாண்டியனும் சரத்குமாரும் ஊர்க்காவல்காரன் மாதிரி அந்த போஸ்டரில் போஸ் கொடுத்திருந்தனர்.

அதுமட்டுமில்லாமல் போஸ்டரில் once upon a time in உசிலம்பட்டி என டேக் லைன் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதற்கான காரணம் என்ன என்பது பற்றித்தான் சமீபத்தில் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஏற்கனவே தேனி மாவட்டம் மதுரையில் இருந்து பிரிப்பதற்கு முன்பாக நடந்த கதைதான் இந்த கொம்புசீவி என கோடம்பாக்கத்தில் கூறிவந்தார்கள். அதை போல் மதுரையில் இருந்து பிரிப்பதற்கு முன் மதுரையில் உள்ள ஒரு ஐந்து ஊர்களுக்கு தண்ணீர் தரும் பிரச்சினை தொடர்பான கதைதானாம் இது.

ஐந்து ஊர்களில் ஒரு ஊருக்கு மட்டும் அரசு தண்ணீர் கொடுக்க மறுத்ததாம். அந்த ஊர்க்காரர்களுக்கும் அரசுக்கும் இடையே நடக்கும் கதையாக இந்த கொம்புசீவி திரைப்படம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

பொதுவாக சமீபகாலமாக சரத்குமார் தேர்ந்தெடுக்கும் கதைகள் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. அதை போல இந்தப் படத்திற்கும் அவரின் அதிர்ஷ்டம் வேலைக்கு ஆகுமா என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு வேளை வெற்றியடைந்தால் சண்முகப்பாண்டியனுக்கு ஒரு டர்னிங் பாயிண்டாக இந்தப் படம் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏற்கனவே அவரின் நடிப்பில் படைத்தலைவன் படமும் புரடக்‌ஷனில் இருந்து வருகிறது. கேப்டனை போலவே அவருடைய மகனும் இந்த சினிமாவில் ஜொலிக்க ரசிகர்களும் ஆசைப்படுகின்றனர்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment