7 நாள் 24 மணி நேரமும் தூங்காம நடிச்ச திரைப்படம்! அஜித் பற்றி இயக்குனர் பெருமிதம்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:39:07  )

தமிழ் திரையுலகில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித். தற்போது குட் பேட் அக்லி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் அஜித். விடாமுயற்சி படத்தின் வேலைகளும் ஒரு பக்கம் நடந்து வருகின்றன. அந்தப் படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் மீதம் இருப்பதாக சொல்லப்படுகிறது. விடாமுயற்சி படத்தை பொறுத்தவரைக்கும் எப்போது ரிலீஸ் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை,

ஆனால் குட் பேட் அக்லி படம் அடுத்த வருடம் பொங்கல் ரிலீஸ் என்று அறிவித்துவிட்டார்கள். அதனால் அந்தப் படத்தின் படப்பிடிப்புதான் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தில் சமீபத்தில் நடிகர் பிரசன்னா இணைந்திருக்கிறார். மேலும் குட் பேட் அக்லி படத்தின் சில காட்சிகள் இணையத்தில் லீக் ஆனது. அதில் ஒரு காரில் இருந்து அஜித் இறங்குவது போல பதிவாகியிருந்தது.

அதையும் விட்டுவைக்காத ரசிகர்கள் பில்லா இஸ் பேக் என்று கமெண்டில் கூறி வந்தனர். இப்படி அஜித்தை பற்றி எந்தவொரு புகைப்படம் அல்லது வீடியோ எதுவாக இருந்தாலும் அதை சோசியல் மீடியாக்களில் வைரலாக்கி டிரெண்டிங்காக்கி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

இந்த நிலையில் அஜித்தை பற்றி கே.எஸ். ரவிக்குமார் ஒரு பேட்டியில் சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அஜித்தை வைத்து ரவிக்குமார் வரலாறு படத்தை இயக்கினார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியது. படத்தில் அஜித் மூன்று கெட்டப்களில் நடித்திருப்பார்.

அதனால் ஒரு இயக்குனராக உங்களுக்கு அதிக பொறுப்புகள் இருந்திருக்குமே? தூங்க கூட நேரமிருக்காதே என்ற ஒரு கேள்வியை ரவிக்குமாரிடம் கேட்ட போது அதற்கு ரவிக்குமார் ஒரு நடிகராக எப்போதுமே அவர்களுடைய மூளை 24 மணி நேரமும் வேலை செய்யவேண்டும் என்ற அவசியமில்லை. இயக்குனருக்குத்தான் படம் பூஜை போட்டதில் இருந்து ரிலீஸாகும் வரை ஏகப்பட்ட டென்சன் இருக்கும்.

பரபரப்பில் இருப்பார்கள். ஆனால் வரலாறு படத்தை பொறுத்தவரைக்கும் அஜித் மூன்று கெட்டப். அதனால் 7 நாள்களும் 24 மணி நேரமும் அவர் தூங்காமல் நடித்தார். அஜித்தே அப்படி இருக்கும் போது ஒரு இயக்குனர் நான். எப்படி தூங்க முடியும். அதனால் தூங்காமல் அந்தப் படத்திற்கு உழைத்திருக்கிறேன் என ரவிக்குமார் கூறினார்.7 நாள் 24 மணி நேரமும் தூங்காம நடிச்ச திரைப்படம்! அஜித் பற்றி இயக்குனர் பெருமிதம்

Next Story