Categories: Cinema News latest news

அதிரடியாக வெளியான குபேரா படத்தின் ஆடியோ ரிலீஸ் அப்டேட்… ஆட்டம் களைக்கட்டும் போலயே

Kubera: தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் குபேரா படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஃபிடா, லவ் ஸ்டோரி படங்களை இயக்கிய சேகர் கம்முலாவின் அடுத்த திரைப்படமாக உருவாகி வருகிறது குபேரா. சேரியில் இருந்து பணக்கார இடத்துக்கு வரும் கதையாக இருக்கும் என நம்பப்படுகிறது. தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

மேலும், இப்படத்தில் தனுஷின் கேரக்டர் பெரிய அளவில் பேசப்படும் என நம்பப்படுகிறது. ஒரு காட்சியில் தனுஷின் நடிப்பு படக்குழுவையே பிரமிக்க வைத்ததாகவும் தகவல்கள் பரவி இருக்கிறது. முதல்முறையாக நாகர்ஜூனா மற்றும் தனுஷ் கூட்டணி வேறு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்துள்ளது.

இப்படம் வரும் ஜூன் 20ந் தேதி திரைக்கு வரும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் ஜூன் 5ந் தேதியே தக் லைஃப் வெளியாகி விடும் என்பதால் இப்படத்திற்கு பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது எனவும் நம்பப்படுகிறது.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. 2 நிமிடம் ஒளிபரப்பாகும் அந்த வீடியோவில் பெரும்பாலும் டயலாக் இல்லாமல் இருப்பதே ஆச்சரியத்தை உருவாக்கி வைத்துள்ளது. இதுமட்டுமல்லாமல் இப்படத்தில் பெரிய அளவில் ஆக்‌ஷன் காட்சிகளாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

மேலும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் போய் வா என்ற பாடலை தமிழ் மற்றும் தெலுங்கில் தனுஷே பாசி இருக்கிறார். ஏற்கனவே சூப்பர் ஹிட்டாகி விட்டதால் படம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி வைத்திருக்கும் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் ஜூன் 1ந் தேதி நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தனுஷ் மற்றும் நாகர்ஜூனா இருவரும் கலந்து கொள்வார் எனவும் கூறப்பட்டுள்ளது.

குபேரா, கூலி தற்போது ஜெயிலர்2 என தொடர்ந்து நாகர்ஜூனா தமிழில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் அவர் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. வரும் மாதங்களில் முன்னணி பிரபலம் ரிலீஸ் ஆக இருப்பதால் திரைப்பட ரசிகர் செம குஷியில் உள்ளனர்.

வீடியோவைக் காண: https://x.com/KuberaaTheMovie/status/1927666607704232428

Published by
ராம் சுதன்