Kuberaa: தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் குபேரா படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் நடிகர் தனுஷுக்கு தனி இடம் என்பது தான் உண்மை. அந்த வகையில் அவர் நடிப்பில் எப்போதுமே வித்தியாசமாக ரிலீஸாகும் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறும் என்பதே உண்மை.
தற்போது தொடர்ச்சியாக தமிழ், இந்தியில் பிஸியாக நடித்து வருகிறார் தனுஷ். தன்னுடைய இயக்கத்தில் இட்லி கடை, சேகர் கம்முலு இயக்கத்தில் குபேரா என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. இதில் இந்த இரண்டு படங்களுமே தற்போது ரிலீஸுக்கு தயாராகி விட்டது.
இட்லி கடை படம் ஏப்ரல் மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஜித்தின் குட் பேட் அக்லி ரிலீஸ் காரணத்தால் படத்தின் வெளியீடு தற்போது தள்ளிப்போய் இருக்கிறது. அதன் ரிலீஸ் தேதி இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாமல் உள்ளது.
தொடர்ந்து சேகர் கம்முலு இயக்கத்தில் குபேரா ஜூன் 20ந் தேதி ரிலீஸுக்கு தயாராகி விநியோக வேலை நடந்து வருகிறது. அதற்காக தமிழ்நாட்டு பிரபல விநியோகஸ்தர் ராகுல் படத்தினை பார்த்து விட்டதாகவும், அதன் விமர்சனம் குறித்தும் பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், குபேரா படத்தினை பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. படத்தில் தனுஷ் மற்றும் நாகர்ஜூனா நடிப்பு தொடங்கி திரைக்கதை வரை பவர்புல் மற்றும் அதிரடியாக இருக்கிறது. தனுஷிற்கு அடுத்த பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாக அமையும்.
நாகர்ஜூனா, ராஷ்மிகா, ஜிம் உள்ளிட்டோர் நடிப்பும் ஆச்சரியமாக இருக்கிறது. விரைவில் தியேட்டருக்கு வந்து எல்லாரும் இதை பார்க்க வேண்டும் என நினைப்பதாக தெரிவித்துள்ளார். பிச்சைக்காரர் வேடத்தில் தனுஷ் நடிப்பதால் இப்படத்திற்கு தற்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…