Categories: Cinema News latest news

குபேரா படக்குழுவுக்கு என்னதான் ஆச்சு? நீங்களாம் எதுக்கு படம் எடுக்குறீங்க… கொந்தளிக்கும் ரசிகர்கள்…

Kuberaa: தனுஷ் மற்றும் நாகர்ஜூனா நடிப்பில் உருவாகி இருக்கும் குபேரா படக்குழுவை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்த அப்டேட்களும் கசிந்து வருகிறது.

தமிழில் கேப்டன் மில்லர் திரைப்படத்துக்கு பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது. அதை தொடர்ந்து அவர் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ரிலீஸ் செய்யப்பட்டது.

சுமார் விமர்சனம் பெற்றாலும் தனுஷின் டைரக்‌ஷனுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. தற்போது தொடர்ந்து நடிப்பிலும், இயக்கத்தில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் தனுஷ். அந்த வகையில் அவரின் அடுத்த படமாக குபேரா தயாராகி வருகிறது.

இப்படத்தினை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து இருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக பல முக்கிய இடங்களில் நடந்து இருக்கிறது.

அதிலும் தனுஷ் இப்படத்தில் பிச்சைக்காரர் வேடத்தில் நடித்திருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் குப்பை கிடங்கு பகுதியில் அவர் நடித்தது படக்குழுவையே ஆச்சரியப்படுத்தி இருக்கிறதாம். இப்படத்தின் கதை ரொம்பவே புதிதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய பணக்காரருக்கும், காசில்லாத ஏழைக்கும் இடையில் நடக்கும் கதை தான் இப்படம் எனக் கூறப்படுகிறது. இதில் சண்டை காட்சிகள் இல்லாமல் பல திருப்பங்களை கொண்டு இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இப்படத்தினை வரும் ஜூன் 20ந் தேதிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் படத்தின் டிரைலருக்கு தான் பெரிய சிக்கலே நடந்துள்ளது. இன்று ரிலீஸ் செய்யப்பட இருந்த டிரைலர் திடீரென நாளை தள்ளி வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்து இருப்பதால் இன்னும் ஐந்து தினங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் டிரைலருக்கு இப்படி இழுத்தடித்து வருவது நல்லாவா இருக்கு. தயாரிப்பாளரிடம் சரியான பிளானிங்கே இல்லை. இந்த படம் ரிலீஸாவது ஒழுங்கா இருக்குமா என ரசிகர்கள் பல கேள்விகளை முன் வைத்து வருகின்றனர்.

நாளையாவது டிரைலர் வருமா இல்ல நேரா படமே ரிலீஸ் ஆகிவிடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Published by
ராம் சுதன்