ஜெய்பீம், குட்நைட், லவ்வர் என்று பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்தவர் மணிகண்டன். இவரது நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள படம் குடும்பஸ்தன்.
அதிக வசூல்: ராஜேஸ்வர் காளிசாமி இயக்கியுள்ள இந்தப் படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் நாளை விட 2ம் நாளில் அதிக வசூல் என்பதை வைத்தே படம் எப்படிப்பட்டது என சொல்லி விடலாம். மணிகண்டனுக்கு ஜோடியாக சான்வி மேக்னா நடித்துள்ளார். குரு சோமசுந்தரம், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ளனர்.
குடும்பப்படம் + காமெடி: வைஷாக் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தோட ஸ்பெஷல் என்னன்னா குடும்பப்படமாகவும் காமெடி கலந்தும் உள்ளது. அந்தவகையில் இந்தப் படம் பார்க்கும்போது நமது வாழ்க்கையும் அதனுடன் தொடர்பு உடையதாகவே தெரிகிறது.
படத்தில் நடுத்தர வர்க்கத்து பையனாக வரும் மணிகண்டன் கதாபாத்திரத்திற்கு அச்சு அசலாகப் பொருந்தி இருக்கிறார். இதர கேரக்டர்களுக்கும் நடிகர்கள் நன்றாகப் பொருந்தி இருக்கிறார்கள். படம் விறுவிறுப்பாக இருக்கக் காரணம் என்னன்னா படத்தில் வரும் டயலாக் என்கிறார் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூசட்டைமாறன்.
கதைத்தேர்வு: மணிகண்டனின் படங்களைப் பார்த்தாலே அவரது கதைத்தேர்வு எப்படிப்பட்டது என்று தெரிந்துவிடும். அந்த வகையில் இந்தப் படமும் சிறந்த தேர்வுதான். படத்தில் மணிகண்டன், குருசோமசுந்தரம் யதார்த்தமாக நடித்துள்ளனர். படத்தோட கதைக்களம் மற்றும் திரைக்கதை சூப்பர். மற்றபடி படத்தில் பெரிய அளவில் ஒன்றும் இல்லை. குடும்பக் கதை காமெடியுடன் பக்காவாகச் செல்வதால் ரசிகர்களுக்கு படம் பார்;க்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது.
1.28 கோடி: டைட்டிலைப் பார்த்தால் தாய்க்குலங்கள் ஓடி வந்து விடுவார்கள் என்றே சொல்ல வேண்டும். இப்போது குடும்பஸ்தன் படத்தின் 2 நாள் கலெக்ஷன் என்னன்னு பார்க்கலாமா… முதல் நாளன்று 0.8கோடியும், 2ம் நாளில் 1.28 கோடியும் வசூலித்துள்ளது. மொத்த வசூல் 2.08 கோடி வசூலித்துள்ளது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…