Categories: latest news

அம்மா, அப்பா தயவுல தான் ஹீரோயின் ஆகப் போறேன்!.. ஓவர் பந்தா இல்லாம பேசிய குஷ்பு மகள்!..

நடிகை குஷ்பூவின் இளைய மகள் அனந்திதா தக் லைஃப் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய நிலையில் தற்போது அவரின் மூத்த மகள் அவந்திகாவும் நடிகையாக களமிறங்க உள்ளார். இது குறித்து ஒரு பேட்டியில் அவந்திகா பேசியிருக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

நான் மிகவும் உயரமாக இருப்பதால் எனக்கு கொஞ்சம் கஷ்மாக இருந்தது, எல்லாரும் என்னை விட சின்னதாக இருக்கிற மாதிரி இருக்கும், எங்கயாவது போனா குனிஞ்சு போகணும் குனிஞ்சு உட்காரணும் இதெல்லாம் சகஜம் தான்னு நெனச்சு பழக எனக்கு கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது.

சின்ன வயசுல நான் ரொம்ப குண்டா கண்ணாடி போட்டுட்டு அழகா இருக்க மாட்டேன். நடிக்க ஆசை இருந்தது. ஆனால், நான் சீரியசா எடுத்துக்கல. பேண்டமிக் டைம்ல தான் நான் என்ன கேர் எடுத்து எடைய குறைச்சேன், நான் யாருடைய உதவி இல்லாம தான் வந்தேன்னு சொல்ல மாட்டேன், என் அம்மா, அப்பா சினிமால இருகுறதுனால வாய்ப்புகள் சுலபமா கிடைக்குது, ஆனால் நான் முயற்சி செய்றதுனாலையும் தான் கிடைக்குது.

நான் நடிக்கணும்னு சொன்னதுக்கு என் அப்பா,அம்மா இரண்டு பேரும் சப்போர்ட் தான் பண்ணாங்க, உனக்கு என்ன பிடிச்சிருக்கோ அதை செய்ணு சொன்னாங்க. அதோட எங்களோட தயாரிப்பு நிறுவனம் மூலம் நான் அறிமுகமாக மாட்டேன், ஏன் என்றால் அது ரொம்ப அட்வான்டேஜ் எடுக்ற மாதிரி இருக்கும் அப்றமா நடிப்பேன், ஆனா அறிமுகம் மட்டும் ஆக மாட்டேன்.

என்னுடைய பெற்றோர் இருவரும் வெவ்வேறு திசையில் பிஸியாக இருந்தாலும் எங்களுக்காக எந்த இடந்த்திலும் ஆப்ஸண்டா இருந்தது இல்லை. என் அம்மா ஷூட்டிங்கில் இருந்தாலும் எனக்கு சாப்பாடு கட்டி ஸ்கூல்ல விட்டுட்டு தான் போவாங்க, அதனால அவங்கள நான் எப்பவுமே மிஸ் பண்ணதில்லை.

நான் பல ஸ்கிரிப்ட் கேட்டுக்கொண்டிருக்கிறேன், நல்ல கதை நல்ல கேரக்டர் வருது. எனக்கு காமெடி, த்ரில்லர், ஹாரர் அப்படி எல்லா விதமான படத்தையும் பண்ணணும்னு ஆசை. நான் இவ்ளோ தான் பண்ணுவேன்னு இல்ல. என்னுடைய பாட்டியோட பெயர் தான் நான் முதல்ல டாட்டூ போட்டேன். வெப்சீரிஸ் பண்றதுக்கு ரொம்ப ஆசையா இருக்கு, கரீஸ்மா என்னுடைய தங்கை மாதிரி வேற யாரையும் சினிமால தெரியாது. எந்த ஹீரோ பிடிக்கும்னு சொல்ல மாட்டேன், நடிச்சதுக்கு அப்புறம் சொல்றேன், இவர் கூட தான் நடிக்க அசைப்பட்டேன்னு என்று மனம் திறந்து பேசியுள்ளார் அவந்திகா.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

2 minutes ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

1 hour ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

2 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

3 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

3 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

10 hours ago