Categories: latest news

Thuglife: இந்த ரெண்டு பேருல நீ யார் கூடம்மா போக போற? தெறிக்க விட்ட தக் மீம்ஸ்!

மணிரத்னம் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கமல், சிம்பு நடித்த தக் லைஃப் இரு தினங்களுக்கு முன் வெளியானது. படத்திற்கு பாசிடிவாக விமர்சனங்கள் வரும் என்று பார்த்தால் நெகடிவ் தான் நிறைய வருகின்றன.

கமல் கதை எழுதிய இந்தப் படத்தை மணிரத்னம் சற்று மாறுதல் செய்து திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். கமல் உடன் சிம்பு முதன்முறையாக இணைந்துள்ளார். படத்தின் முதல் பாதி மெதுவாகவும் 2ம் பாதி விறுவிறுப்பாகவும் செல்வதாக முதல் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் சொன்னார்கள்.

ஆனால் சினிமா விமர்சகர்கள் புளூசட்டைமாறன் உள்பட பலர் படத்தைக் கிழித்துத் தொங்க விட்டுள்ளனர். மாமனாரின் இன்பவெறி, அஞ்சறைக்குள்ள வண்டி மாதிரி இது கேங்ஸ்டர் படமா, பிட்டுப்படமா என கேள்வி எழுப்பி உள்ளனர். சினிமா விமர்சகர் சங்கர் இந்தப் படத்தில் கேங்ஸ்டர் என்ன வேலை செய்றாங்கன்னே தெரியல.

அப்பனும், மகனும் திரிஷாவுக்காக அடிச்சிக்கிறாங்க. ஏன் இந்த வக்ரபுத்தின்னு காரசாரமாக விமர்சித்துள்ளார். ரொம்ப எதிர்பார்ப்போடு பார்க்க போகாதீங்க. கமலை மட்டுமே நம்பி மணிரத்னம் படம் எடுத்துள்ளார். அவர் அவுட் டேட் ஆகி விட்டார். சிம்பு கமலுக்கு எவ்வளவோ தேவல என்றெல்லாம் நெகடிவ் ரிவியூஸ் வருகிறது.

வசூலிலும் இந்தியன் 2, ரெட்ரோ படங்களை விட குறைவாகவே உள்ளது. இந்திய அளவில் முதல் நாள் வசூல் வெறும் 17 கோடி தான். படத்தில் ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் சூப்பர். என்றாலும் ஜிங்குச்சா தவிர எல்லா பாடல்களும் அரைகுறையாகத் தான் காட்டப்படுகின்றன. இந்தப் படத்திற்கு இப்போது ஒரு மீம்ஸ் போட்டுள்ளார்கள். டிவியில் லட்சுமி ராமகிருஷ்ணன் காதல், கல்யாணம் மற்றும் குடும்பப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் வகையில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

இதில் அவர் கட்டப்பஞ்சாயத்தே பண்ணுவார். பிரச்சனைக்குள்ளான நபர்கள் அவர் கேட்கும் கேள்வியில் வெலவெலத்துப் போவார்கள். அந்த வகையில் தக் லைஃப் கமல், சிம்புவிடம் திரிஷாவை முன்வைத்து ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். ‘இந்த ரெண்டு பேருல நீ யார் கூடம்மா போகப் போற’ன்னு அந்த மீம்ஸ் இப்போது வைரலாகி வருகிறது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

2 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

4 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

4 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

5 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

6 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

12 hours ago