பேரை கேட்டா சும்மா அதிருதுல.. அடுத்த பட டைட்டில் பற்றி அப்டேட் கொடுத்த அண்ணாச்சி

Published on: August 8, 2025
---Advertisement---

பிரபல தொழில் அதிபர் லெஜெண்ட் சரவணன் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் தி லெஜென்ட். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதுமட்டுமல்ல ஆரம்பத்தில் இவர் பல உருவ கேலிகளுக்கும் ஆளானார். ஆனால் அதையெல்லாம் பற்றி அவர் கவலை கொள்ளவே இல்லை. இந்த நிலையில் அவருடைய இரண்டாவது படத்தையும் ஆரம்பித்தார்.

இந்தப் படத்தை கருடன் திரைப்படத்தின் இயக்குனரான ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார். ஏற்கனவே காக்கி சட்டை கொடி உள்ளிட்ட நல்ல படங்களை கொடுத்தவர்தான் ஆர் எஸ் துரை செந்தில்குமார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த நிலையில் இன்று லெஜெண்ட் சரவணன் பத்திரிகையாளர்களை சந்தித்து அவருடைய அடுத்த படம் குறித்த அப்டேட்டுகளை கொடுத்திருக்கிறார்.

படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நிறைவடைந்ததை ஒட்டி இரண்டாம் கட்டப்படபடிப்பு தூத்துக்குடி அருகே உள்ள ஒரு சிற்றூரில் நடந்து வருகின்றது. அதனால் தூத்துக்குடியை மையமாக வைத்த ஒரு உண்மை சம்பவமாக இந்த படம் இருக்கலாம் என தெரிகிறது. இந்த படம் எப்படிப்பட்ட ஒரு படம் என்று சரவணனிடம் கேட்டபோது ஆக்சன் திரில்லர் சென்டிமென்ட் எமோஷனல் என எல்லாமே கலந்த கலவையாக தான் இந்த படம் இருக்கும் என்றும் சொல்லி இருக்கிறார்.

முதல் படத்தை பொருத்தவரைக்கும் அது ஒரு மாஸ் ஆக்சன் படமாக இருந்தது. ஆனால் இந்தப் படம் எல்லாம் கலந்த கலவையாக இருக்கும் என கூறி இருக்கிறார் .படத்தைப் பற்றிய டைட்டில் குறித்துகேட்கையில் மாஸா இருக்குமா பக்காவா இருக்குமா? எனக் கேட்டபோது படத்தின் டைட்டில் மாஸாகத்தான் இருக்கும் என கூறி இருக்கிறார் லெஜெண்ட் சரவணன். இவர் அவ்வப்போது சமூக சேவையும் செய்து வருகிறார்.

saravanan

saravanan

அதுமட்டுமில்லாமல் இவர் இப்போது நடித்து வரும் படம் இந்த வருட தீபாவளி அன்று ரிலீஸாகும் என்றும் சொல்லியிருக்கிறார். அதனால் இந்த தீபாவளி நம்ம தீபாவளிதான் என கூறினார் லெஜெண்ட் சரவணன்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment