Categories: Cinema News latest cinema news latest news lik movie அகாண்டா எல்.ஐ.கே ஜெனி

டிசம்பரில் வெளியாகும் 5 படங்கள்!… LIK-வுடன் மோதும் GENIE!….

இந்த வருட தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் Dude, துருவ் விக்ரமின் பைசன், ஹரீஸ் கல்யாணின் டீசல் ஆகிய மூன்று படங்களும் வருவது உறுதியாகியுள்ளது. அதன்பின் வருகிற டிசம்பர் மாதம் 5 முக்கிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. 2025ம் வருடத்தின் கடைசி மாதத்தில் இந்த படங்கள் ரிலீஸாகிறது. அவை என்னென்ன படங்கள் என பார்ப்போம் வாருங்கள்.

சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய படங்களை இயக்கிய நலன் குமாரசாமி கார்த்தியை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் வா வாத்தியார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கார்த்தியின் உறவினரான ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பல மாதங்கள் நடந்து ஒருவழியாக முடிவடைந்தது. இந்த படத்தில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். டிசம்பர் 5ம் தேதி இப்படம் வெளியாவுள்ளது.

lik

அடுத்து விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள LIK படம் டிசம்பர் 18ம் தேதி வெளியாகவுள்ளது. கீர்த்திஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்திருக்கிறார். காதல் கலந்த ஃபேண்டஸி திரைப்படமாக LIK உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது. தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு பிரதீப்பின் டியூட் படம் வந்ததால் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருக்கிறார்கள்.

அடுத்து ஜெயம் ரவி நடித்து GENIE (ஜெனி) படம் டிசம்பரில் வெளியாகிறது. ஆனால், ரிலீஸ் தேதியை இன்னமும் படக்குழு முடிவு செய்யவில்லை. ஜெனி படத்தில் கீர்த்திஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் இருவரும் கதாநாயகியாக நடிக்க புவனேஷ் அர்ஜுனன் என்பவர் இயக்கியுள்ளார். ஜெயம் ரவிக்கு இப்படம் ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#image_title

மேலும், பாலையா என தெலுங்கு சினிமா ரசிகர்களால் அழைக்கப்படும் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியுள்ள அகாண்டா 2 திரைப்படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது. தெலுங்கில் உருவான இப்படம் த்மிழில் டப் செய்யப்பட்டிருக்கிறது. முதல் பாகம் ஹிட் அடித்த நிலையில் தற்போது 2ம் பாகம் உருவாகியுள்ளது.

அடுத்து ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கியுள்ள Avatar Fire and Ash படம் டிசம்பர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. ஏற்கனவே 2 பாகங்கள் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்ட நிலையில் தற்போது 3ம் பாகம் வெளியாகவுள்ளது.

Published by
ராம் சுதன்