சண்டக்கோழி படத்துல லிங்குசாமிக்கு ராஜ்கிரண் கொடுத்த ஐடியா... அதான் பட்டையைக் கிளப்பிடுச்சா?

2005ல் லிங்குசாமி இயக்கிய படம் சண்டக்கோழி. விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண், கஞ்சா கருப்பு உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர்ராஜா இசை அமைத்துள்ளார். இந்தப் படம் கமர்ஷியலா ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் ஒரு காட்சியில் ராஜ்கிரண் இயக்குனருக்கு ஐடியா கொடுத்தாராம். இதுபற்றி லிங்குசாமி என்ன சொல்றாருன்னு பாருங்க.
சண்டக்கோழி: ராஜ்கிரண் சார் நான் ரொம்ப மதிக்கிற ஆள். சண்டக்கோழி படம் எடுக்கும்போது ஒரு சீன் எடுக்கும்போது, சாங் எடுக்கும்போது என்னைக் கூப்பிட்டாரு. அந்தளவு அவருக்கு நாலெட்ஜ் இருக்கு. அவரு சொல்லும்போதே அந்தக் கருத்து நம்ம பக்கத்துலயாவது வருதா? அது எந்த லெவல்ல இருக்கு? நெருங்குதா? நாம ஷார்க் ஆகுற அளவுக்கு சொல்றாங்களா? சூட்டிங்கயே ஒரு நிமிஷம் நிறுத்திடலாமோன்னு தோணும்.
ராஜ்கிரண்: நான் தப்பு பண்ணிக்கிட்டு இருக்கேனேன்னு தோணுற அளவுக்கு ஒரு சில விஷயங்களைச் சொல்லிருவாங்க. அதே மாதிரி தாவணி போட்ட தீபாவளி சாங்க்ல குறுக்கே மறுக்கே நடந்துக்கிட்டு இருப்பாரு. அவரை ஸ்டெப் போட விட்டுருப்பாங்க. அந்த மரியாதையை அந்தக் கேரக்டர் மேல வச்சிருக்காரு.
அவரு உணர்ந்துருக்காரு. நானே மறந்துட்டேன். அதே மாதிரி இன்டர்வல் பிளாக்ல ஒரு சின்ன வசனம்தான் கம்மியா வச்சிருந்தேன். எட்டி மிதிச்சிட்டு ஒரு வார்த்தை பேசணும். கூப்பிட்டாரு. 'தம்பி 10 சீனுக்கு மேல என்னைப் பத்திப் பேச ஆரம்பிச்சிட்டீங்க.
கிளைமாக்ஸ் பைட்: இந்த இடம் அப்படி வந்து நிக்குது. ரெண்டு மூணு வார்த்தை அதிகம் பேசுனா நிக்கும் தம்பி. எழுத முடியுமா'ன்னு ராஜ்கிரண் கேட்டாரு. கரெக்ட் டா. நமக்குத் தோணனும். அவரு சொல்றது நமக்கு அடிக்கணும். கேமராமேன் கூட நான் என்ன நினைக்கிறேனோ அதையே சொல்வாரு. நீரவ்ஷா கேமராமேன். அந்தக் கிளைமாக்ஸ் பைட் எடுக்கும்போது ஒரு சருகு பறந்தா நல்லாருக்கும்னு சொன்னது அவருதான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.