பையா படத்தில் நடிக்க இருந்தது அந்த நடிகைதான்… சண்டையால் நடந்த விபரீதம்!

by ராம் சுதன் |
பையா படத்தில் நடிக்க இருந்தது அந்த நடிகைதான்… சண்டையால் நடந்த விபரீதம்!
X

Paiyaa: கார்த்தி நடிப்பில் வெளியான பையா படத்தில் நடிக்க இருந்த முதல் நடிகை குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

லிங்குசாமி இயக்கிய திரைப்படம் பையா. திருப்பதி பிரதர்ஸ் பேனரில் என். சுபாஷ் சந்திர போஸ் பெயரில் தயாரித்து தயாநிதி அழகிரிஸ் விநியோகம் செய்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட் அடித்தது.

முதலில் இப்படத்தினை கார்த்தி மற்றும் ராம்சரண் நடிக்க வைக்க தமிழ் மற்றும் தெலுங்கில் என ஒரே நேரத்தில் படமாக்க திட்டமிடப்பட்டது. ஷூட்டிங் சமயத்தில் விஷால் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் திடீரென கார்த்தி நடிக்க இருப்பதாக ஒப்பந்தமானது.

இப்படத்திற்கு முதலில் குதிரை எனப் பெயரிடப்பட்டு பின்னர் பையா என மாற்றப்பட்டது. ஆயிரத்தில் ஒருவன் படத்தின் ஷூட்டிங் கலந்துக்கொண்டதால் பையா படம் பலமுறை தள்ளிப் போனது.

இந்நிலையில், முதலில் தமன்னா ஒப்பந்தமாகும் முன்னர் நயன்தாராவை தான் இயக்குனர் லிங்குசாமி ஒப்பந்தம் செய்து இருக்கிறார். ஒரு கோடி சம்பளம் பேசி அவரை படத்தில் ஓகே செய்து விட்டனர்.

லிங்குசாமி தன்னுடைய 19 வயதில் இப்படத்தினை இயக்க இருந்தாராம். அவருக்கு யாரடி நீ மோகினி படத்தில் நயனின் நடிப்பு பிடித்து போக அவரை உடனே ஓகே செய்து விட்டனர். இருந்தும், லிங்குசாமி மற்றும் நயன்தாரா இடையே சண்டையால் அவர் படத்தில் இருந்து விலகினார்.

அதை தொடர்ந்தே நடிகை தமன்னா நடிக்க ஒப்பந்தமாகினார். ரோட்டில் நடக்கும் படம் என்பதால் அடிக்கடி கேரவன் பிடிக்க முடியாது. ட்ரஸ் சேஞ்ச் செய்ய வேண்டும் என்றால் கூட வெறும் புடவை வைத்துக்கொண்டு டிரெஸை மாற்றிவிட்டு விடுவார் என இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

Next Story