எம்.ஜி.ஆர் முதல் மாதவன் வரை… ஷூட்டிங் முடிந்தும் ரிலீஸாகாமல் இருக்கும் டாப் 5 படங்கள்!

Published on: March 18, 2025
---Advertisement---

Kollywood: சினிமாத்துறையில் ஒரு படம் தயாரிக்கப்பட்டு வெளிவருவதே பெரிய சவால் தான். ஆனால் அதில் தவறினால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பெட்டியில் தான் படம் தூங்கும். அப்படி மிகப்பெரிய ஸ்டார்களின் படங்கள் கூட இன்னும் பெட்டியில் இருக்கிறது. அதன் சுவாரஸ்ய லிஸ்ட் இதோ!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் எம்.ஜி.ஆருக்கே இது நடந்துள்ளது. அவருடன், லதா, நம்பியார் நடித்து 1979ல் உருவான படம் “அண்ணா நீ என் தெய்வம்” . இது எம்ஜிஆரின் கடைசி படமாக உருவானதால் அவரின் தீவிர ரசிகரான கே‌.பாக்யராஜ் இந்த படத்திற்கு ஏற்ப திரைக்கதை அமைத்தார். இதன் தொடர்ச்சியாக எடுத்த படம் அவசர போலீஸ் 100.

2006 ஆம் ஆண்டு கோணா வெங்கட் இயக்கத்தில் மாதவன், சதா நடிப்பில் உருவான திரைப்படம் நான் அவள் அது. ஜி வி பிரகாஷ்குமார் இசையில் பாடல்கள் எல்லாமே ஹிட் அடித்தது. இப்படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்த பண பிரச்சினையால் வெளியாகவில்லை.

2014ல் பாலிவுட்டில் ஹிட் அடித்த குயின் திரைப்படத்தை 2017 ஆம் ஆண்டு தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்தனர். இதில் தமிழில் காஜல் அகர்வாலும், தெலுங்கில் தமன்னாவும், மலையாளத்தில் மஞ்சிமாவும், கன்னடத்தில் பருல் யாதவும் நடிக்க இருந்தனர். பாரிஸ் பாரிஸ் எனப் பெயரிடப்பட்ட எந்த வெர்சனும் வெளியாகவில்லை.

அவள் பட இயக்குநர் மிலிந்த ராவ் இயக்கத்தில் உருவான முதல் படம். ஆர்யா தம்பி சத்யா மற்றும் திவ்யா ஸ்பந்தனா இருவரும் இணைந்து நடித்திருந்தனர். யுவன் இசையில் டிரெய்லரும் ஹிட் அடித்த காதல் 2 கல்யாணம் வரை ப்ரீவியூ ஷோ வரை போய் கிடப்பில் போடப்பட்டது.

அரவிந்த் சாமி மற்றும் மாதிரி தீட்சித் நடிப்பில் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் 1999ல் உருவானது “இன்ஜினியர்” திரைப்படம். அப்போது பிரபலமாக இருந்த சர்தார் சரோவர் அணை குறித்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. இருந்தும் சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment