ரஜினி பயோபிக்கில் இவங்கதான் என்னுடைய சாய்ஸ்! தரம் பிரிச்சு காட்டிய லோகேஷ்

Published on: August 8, 2025
---Advertisement---

தற்போது ரஜினி கூலி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கூலி படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மாநகரம் படத்தில் தொடங்கி தொடர்ந்து ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து வரும் லோகேஷ் ரஜினியை வைத்து கூலி படத்தை எடுத்துள்ளார். ரஜினி என்றாலே மாஸ் ஆக்‌ஷன் என ஒரு பக்கா கமெர்ஷியல் படமாகத்தான் இருக்கும்.

இதில் வன்முறை ஆக்‌ஷன் படங்களை கொடுத்தே தனக்கென முத்திரையை பதித்த லோகேஷ் ரஜினியுடன் இணைந்திருப்பது படத்திற்கு பெரிய அளவில் ஹைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ரஜினியுடன் கூலி படத்தில் அமீர்கான், நாகர்ஜூனா, உபேந்திரா, சத்யராஜ், சுருதிஹாசன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர்.

இதுவும் படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கூலி படத்தை பொறுத்தவரைக்கும் வசூலில் கண்டிப்பாக எதிர்பாராத சாதனையை படைக்கும் என ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு முடித்து ரிலீஸுக்காக படம் காத்துக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் லோகேஷ் படத்தின் புரோமோஷன் வேலைகளை ஆரம்பித்து விட்டார்.

கூலி படத்தை பற்றியும் அதில் நடித்த அத்தனை ஆர்ட்டிஸ்ட் பற்றியும் பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார் லோகேஷ். இந்த நிலையில் ரஜினியின் பயோபிக் பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவலை லோகேஷ் பகிர்ந்துள்ளார். ரஜினி அவருடைய பயோபிக்கை பற்றி ஒரு முறை லோகேஷிடம் பகிர்ந்து கொண்டாராம். ஒரு வேளை அந்த பயோபிக்கை லோகேஷ் எடுப்பதற்கான வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக எடுப்பேன் என அந்த பேட்டியில் லோகேஷ் தெரிவித்திருக்கிறார்.

dhanush

dhanush

அதுவும் தற்போது இருக்கும் ரஜினி லுக்கிற்கு தனுஷ்தான் சரியாக இருப்பார். அவரை வைத்து எடுக்கலாம். 90ஸ் காலகட்ட ரஜினி மாதிரி என்றால் விஜய்சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் போன்றோர் சரியாக இருப்பார்கள். சிம்புவும் ஒரு விதத்தில் பொருத்தமாக இருப்பார் என லோகேஷ் கூறினார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment