Coolie: கூலி, கைதி 2 ரிலீஸ் எப்போது தெரியுமா?!.. செம ஹைப் ஏத்தும் லோகேஷ் கனகராஜ்!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:28:45  )

Coolie: மாநகரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இளசுகளுக்கு பிடித்த இயக்குனராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். அதற்கு காரணம் அவர் எடுத்துக்கொள்ளும் கதைக்களம்தான். கேங்ஸ்டர் படங்களே இவரின் ஸ்டைல். ஹிந்தியில் ராம்கோபால் வர்மா போல தமிழ் சினிமாவில் கேங்ஸ்டர் படமெடுக்கும் இயக்குனர்கள் யாரும் இல்லை.

அந்த நேரத்தில்தான் அதிரடியாக நுழைந்து அதிர வைத்தார் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய முதல் படமான மாநகரம் படமே திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அடுத்து இயக்கிய கைதி 2 படமும் ஒரு சிறப்பான திரில்லர் படமாக வெளிவந்தது. அதன்பின் மாஸ்டர், விக்ரம், லியோ என அதிரடி ஆக்சன் படஙக்ளை இயக்கினார்.

இவரின் படங்களின் கதை போதை மருந்து மற்றும் கேங்ஸ்டர் இரண்டும் கலந்தே இருக்கும். இதில், மாஸ்டர், விக்ரம் படங்கள் சூப்பர் ஹிட் என்றாலும் லியோ படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. குறிப்பாக படத்தின் 2ம் காட்சியில் வந்த பலி கொடுக்கும் காட்சிகள் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

லோகேஷ் கனகராஜ் இப்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சத்தியராஜ், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, மலையாள நடிகர் சௌபின் சஹீர், கன்னட நடிகர் உபேந்திரா என பலரும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

லோகேஷுடன் ரஜினி இணைவதால் படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என பலரும் நினைக்கிறார்கள். கண்டிப்பாக ஒரு பக்கா ஆக்சன் படமாகவே கூலி வெளியாகவுள்ளது. இந்த படம் எல்.சி.யூ இல்லை.. இது தனிக்கதை என ஏற்கனவே லோகேஷ் சொல்லிவிட்டார். இந்நிலையில், இப்படம் பற்றி சில விஷயங்களை லோகேஷ் பேசியிருக்கிறார்.

கூலி படத்தில் பல மொழிகளிலுருந்து நடிகர்கள் வருகிறார்கள். இது ஒரு பேன் இண்டியா திரைப்படம். நாகார்ஜுன்னா என்ன செய்கிறார் என்பதை சௌபின் பார்த்து கொண்டே இருப்பார். ரஜினி சார் நான் வருவதற்கு முன்பே ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு வந்துவிடுவார். கூலி படம் 2025 சம்மரிலும், கைதி 2 ஆகஸ்டு 25ம் தேதியும் வெளியாகும்’ என சொல்லி இருக்கிறார். அவர் சொல்வதை பார்க்கும்போது கூலி ஷூட்டிங் முடிந்தவுடன் கார்த்தியை வைத்து கைதி 2 படத்தை இயக்குவார் என நம்பப்படுகிறது.

Next Story