லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா!.. ஷூட்டிங் எப்போ ஸ்டார்ட் ஆகுது தெரியுமா?!....

by சிவா |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா!.. ஷூட்டிங் எப்போ ஸ்டார்ட் ஆகுது தெரியுமா?!....
X

Lokesh Kangaraj: கார்த்தியை வைத்து கைதி, விஜயை வைத்து மாஸ்டர், கமலை வைத்து விக்ரம் என படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் லோகேஷ். நடிகர்களுக்கு எப்படி ரசிகர்கள் இருப்பார்களோ அப்படி இவருக்கும் ரசிகர்கள் உருவானார்கள். இவரின் படங்களை லோக்கி யூனிவர்ஸ் என்றார்கள். அதாவது, இதுவரை யாரும் காட்டாத நகரங்களின் இருட்டான பக்கத்தை அவர் காட்டுவதாக சொன்னார்கள்.

LCU: அதேபோல், அவரின் ஒருபடத்தில் வரும் கதாபாத்திரத்தின் தொடார்ந்து அவரின் இன்னொரு படத்திலும் வருவதை எல்.சி.யூ அதாவது Lokesh Cinematic Universe என்றார்கள். இதை லோகேஷும் ஏற்றுகொண்டார். விஜயை வைத்து லியோ படத்தை எடுத்தார். இந்த படத்தின் இரண்டாம் பாதியும், கிளைமேக்ஸும் விமர்சனத்திற்கு உள்ளானது.

ரஜினி கூலி: இப்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். முதன் முதலாக லோகேஷுடன் ரஜினி இணைவதால் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. கூலி படத்தை முடித்துவிட்டு அடுத்து கார்த்தியை வைத்து கைதி 2 படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிய எப்படியும் இந்த வருடம் இறுதி ஆகிவிடும் என்கிறார்கள்.

விக்ரம் ரோலக்ஸ்: அடுத்து சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். லோகேஷ் இயக்கிய விக்ரம் படத்தின் இறுதியில் ரோலக்ஸ் என்கிற படத்தில் சில நிமிடங்கள் சூர்யா வந்தாலும் இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. எனவே, ரோலக்ஸ் வேடத்தை தனியாக ஒரு படமாக எடுங்கள் என அப்போதிலிருந்தே சூர்யா ரசிகர்கள் லோகேஷுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

ஆனால், சூர்யாவிடம் சில வருடங்களுக்கு முன்பே இரும்புக்கை மாயாவி என்கிற தலைப்பில் ஒரு கதையை சொன்னார் லோகேஷ். எனவே, இருவரும் இணைந்து அந்த படத்தை எடுப்பார்களா இல்லை ரோலக்ஸ் படத்தை எடுப்பார்களா என்கிற சந்தேகம் இருந்தது. இந்நிலையில், அடுத்து ரோலக்ஸ் கதையைத்தான் எடுக்க போகிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது.

கைதி 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இந்த படத்தை விஜயை வைத்து ஜனநாயகன் படத்தை இயக்கி வரும் கே.வி.என் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஒப்பந்தமெல்லாம் கையெழுத்து ஆகிவிட்டதாக சொல்கிறார்கள். 2026ம் வருடம் இப்படம் துவங்கவுள்ளது. இந்த செய்தி கண்டிப்பாக சூர்யா ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

Next Story