Categories: Cinema News latest cinema news latest news lokesh kanagaraj rajini kamal movie

எல்லாமே பொய்!. ரஜினி – கமல் படத்தை இயக்கப்போவது அவர்தான்!.. புது அப்டேட் வந்துருச்சி!..

Rajini Kamal: ரஜினியும் கமலும் பல வருடங்களுக்குப் பின் இணைந்து நடிக்கப் போகும் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் என்கிற செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
ஆனால் கூலி படத்தின் ரிசல்ட்டில் ரஜினிக்கு திருப்தி இல்லை என்பதால் இந்த படத்தை லோகேஷ் இயக்க வாய்ப்பில்லை எனவும் பேசினார்கள். அதோடு இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியானது.

ஒருபக்கம் விமான நிலையத்தில் பேட்டி கொடுத்த ரஜினி ‘நானும் கமலும் இணைந்து நடிக்கப் போவது உண்மைதான். இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளது. ஆனால் இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை’ என சொன்னார். அவர் அப்படி சொன்னதால் இப்படத்தை லோகேஷ் இயக்கவில்லையா? என்கிற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டது.

கூலி படத்தின் ரிசல்டால் ரஜினி அப்செட்டில் இருப்பதால் இந்த படத்தை லோகேஷ் இயக்குவதை அவர் விரும்பவில்லை எனவும் பலரும் பேசினார்கள். எனவே ரஜினி-கமல் படத்தை யார் இயக்கப் போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவானது. ஒருபக்கம் இந்த படம் நடக்க வாய்ப்பே இல்லை. கிட்டத்தட்ட இப்படம் ட்ராப்தான் எனவும் பேசினார்கள். இந்நிலையில்தான் இப்படம் பற்றிய முக்கிய தகவல் தற்போது வெளியே தெரிய வந்திருக்கிறது.

lokesh rajini

இந்த படத்திற்கான டிஸ்கஷன் வேலைகள் ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டதாகவும், கூலி படத்திற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனம் லோகேஷ் டீமுக்கு போட்டுக் கொடுத்த ஆபீஸில் தற்போது இந்த படத்தின் வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதோடு இப்படத்தின் ஷூட்டிங் 2026 மே மாதம் தொடங்கி படத்தை 2027 பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் தற்போது செய்திகள் வெளியே கசிந்து இருக்கிறது.

இதன் மூலம் ரஜினி கமல் இணையும் படத்தை இயக்கப் போவது லோகேஷ்தான் என்பது உறுதியாக இருக்கிறது. அனேகமாக ‘நீங்க நல்ல கதையை ரெடி பண்ணுங்க.. நான் ரஜினியிடம் பேசி சம்மதிக்க வைக்கிறேன்’ என லோகேஷிடம் கமல் சொல்லி இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

Published by
ராம் சுதன்