லோகேஷ் கனகராஜை லாக் பண்ணிய அந்த நடிகர்!.. கைதி 2-வுக்கு அப்புறம் இந்த படம்தான்!.....

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:31:24  )

Lokesh kanagaraj: தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். அதற்கு காரணம் அவரின் திரை மொழிதான். அதாவது அவர் எடுத்துக்கொள்ளும் கதை மற்றும் அதற்கு அவர் அமைக்கும் திரைக்கதையும் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கிறது. பெரும்பாலும் ஒரே இரவில் நடக்கும் கதைகளையே அவர் அதிகம் இயக்குகிறார்.

மாநகரம், கைதி இரு படங்களுமே ஒரே இரவில் நடக்கும் கதைதான். விக்ரம் படத்திலும் நிறைய காட்சிகள் இரவு நேரத்தில் எடுக்கப்பட்டது. விஜயை வைத்து மாஸ்டர், லியோ என இரண்டு படங்களை இயக்கினார் லோகேஷ். எனவே, விஜய் ரசிகர்களுக்கும் பிடித்தமான இயக்குனராக லோகேஷ் மாறிவிட்டார்.

லோகேஷ் கனகராஜ் படம் இயக்கும் விதம் மற்ற மொழி ஹீரோக்களுக்கும் பிடித்திருக்கிறது. எனவே, அமீர்கான், சல்மான்கான் போன்றவர்களும் லோகேஷுக்கு வலை விரித்து வருகிறார்கள். கூலி படத்தில் முக்கிய வில்லனாக அமீர்கான் நடிப்பதாகவும் ஒரு செய்தி வெளியே கசிந்தது.

இப்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். ரஜினியுடன் லோகேஷ் கனகராஜ் இணைவதால் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ஒருபக்கம், கூலி படத்திற்கு பின் லோகேஷின் இயக்கத்தில் யார் நடிக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்திருக்கிறது.

கார்த்தியை வைத்து கைதி 2, சூர்யாவை வைத்து ரோலக்ஸ், கமலை வைத்து விக்ரம் ரிட்டன்ஸ், அல்லு அர்ஜுனுடன் ஒரு படம், அமீர்கானுடன் ஒரு ஹிந்தி படம் என பல செய்திகள் அடிபட்டு வந்தது. இதில் அடுத்த படம் கைதி 2 என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில், சமீபத்தில் லோகேஷிடம் பேசி இருக்கிறார் கமல்ஹாசன்.

அமெரிக்காவில் இருக்கும் கமல் திரும்பி வந்தவுடன் அன்பு - அறிவு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அது முடிந்ததும் விக்ரம் ரிட்டன்ஸ் படத்தை எடுப்போம் என சொல்ல, லோகேஷும் ‘ஓகே சார்.. அதுக்குள்ள நான் ரெடி ஆகிவிடுகிறேன்’ என சம்மதமும் சொல்லிவிட்டாராம். எனவே, கூலி மற்றும் கைதி 2 படங்களை முடித்துவிட்டு விக்ரம் ரிட்டன்ஸ் படத்தை லோகேஷ் எடுப்பார் என சொல்லப்படுகிறது.

Next Story