அடுத்த சம்பவம் லோடிங்... தலைவர் ரெடி!... கூலி படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த லோகி!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:30:11  )

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற படத்துடன் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 73 வயதான நிலையிலும் இளம் நடிகர்களுக்கு டப் கொடுத்து தொடர்ந்து சினிமாவில் சுறுசுறுப்பாக நடித்து வருகின்றார். கடந்த மாதம் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை இயக்குனர் எல் ஞானவேல் இயக்கியிருந்தார். அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா, பகத் பாஸில் உள்ளிட்ட பல நடிகர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. மேலும் வசூல் ரீதியாகவும் சற்று சறுக்களை சந்தித்தது. அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்கின்ற திரைப்படத்தில் இணைந்திருக்கிறார்.

கமல், விஜய், கார்த்திக் ஆகியோரை வைத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த லோகேஷ் தற்போது ரஜினிகாந்த் அவர்களை இயக்கி வருகின்றார். சன் பிக்சர் தயாரிப்பில் ஒரு ஆக்சன் படமாக கூலி திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஓய்வில் இருந்து வரும் நிலையில் கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் அல்லாத காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தது. நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சரியாகி உள்ள நிலையில் மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பி இருக்கின்றார் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கூலி திரைப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இன்று கவின் நடிப்பில் வெளியான பிளடி பெக்கர் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த லோகேஷ் கனகராஜ் பிளடி பெக்கர் திரைப்படம் குறித்து பேசியிருந்தார் அப்போது கூலி திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த லோகேஷ் கூலி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இன்னும் இரண்டு ஷெடுல் மட்டுமே மீதம் உள்ளது.

2025 ஆம் ஆண்டு கூலி திரைப்படம் வெளியாகும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேதி விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்து இருக்கின்றார். இந்த செய்தி ரஜினி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் கூலி படத்தில் பல மொழிகளை சேர்ந்த பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, கன்னட பிரபலம் உபேந்திரா, மலையாள பிரபலம் சவுபின் ஷாகிர் மற்றும் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோரும் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் கூட்டணி என்பதால் இப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் வேட்டையன் திரைப்படம் சுமாரான வெற்றியை கொடுத்த நிலையில் கூலி திரைப்படம் நடிகர் ரஜினிகாந்த் ஒரு பிளாக்பஸ்டர் படமாக அமையும் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

Next Story