Categories: latest news

லீக் பண்ணிய நடிகர்கள்!.. லீயோ மாதிரி ஆயிடக்கூடாது!.. டென்ஷனில் வேலை பார்க்கும் லோகேஷ்!…

Coolie: 5 படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும் கோலிவுட்டின் முக்கிய இயக்குனராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ போன்ற படங்கள் மூலம் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனராக மாறினார். கேங்ஸ்டர் கதையில் பக்கா ஆக்‌ஷன் காட்சிகளை வைத்து ரசிகர்களை கவர்ந்தவர் இவர்.

இவருக்கென பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. இவரின் ஒரு படத்தில் வரும் கதாபாத்திரங்கள் இவரின் அடுத்த படத்திலும் வருவதை ரசிகர்கள் எல்.சி.யூ என அழைக்கிறார்கள். ஏனெனில், ஒரு புதுவிதமான.. ரசிகர்கள் இதுவரை பார்த்திராத இருண்ட உலகை லோகேஷ் காட்டுகிறார்.

இப்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்டு 14ம் தேதி வெளியாகவுள்ளது.

தனது படம் பற்றி எந்த தகவலும் வெளியே கசிந்துவிடக்கூடாது என பெரும்பாலான இயக்குனர்கள் நினைப்பார்கள். லோகேஷும் அப்படித்தான். ஏனெனில் சஸ்பென்ஸ் இருந்தால்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும். ஆனால், அமீர்கான், நாகார்ஜுனா போன்றவர்கள் கூலி படம் பற்றி ஊடகங்களில் நிறைய பேசிவிட்டார்கள்.

கூலி படத்தில் வில்லனாக நடிக்கிறேன்.. லோகேஷ் என்னை புலி மாதிரி நடந்து வர சொன்னார் என லோகேஷ் சொல்ல, அமீர்கானும் ஒருபக்கம் கூலி படத்தில் இவ்வளவு நேரம் நான் வருவேன் என்றெல்லாம் சொல்லிவிட்டார். லோகேஷ் லியோ படத்தை இயக்கியபோது படத்தின் மீது அதிகப்படியான ஹைப் இருந்தது. அதுவே, படத்திற்கு கலவையான விமர்சனம் வர காரணமாகிவிட்டது.

அதனால்தான் கூலி மீது எந்த ஹைப்பும் வந்துவிடக்கூடாது என பார்த்துக்கொண்டார் லோகேஷ். ஆனால், நாகார்ஜுனாவும், அமீர்கானும் அதை கொஞ்சம் உடைத்துவிட்டனர். இதன் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துவிடும் என்கிற டென்ஷனில் இருக்கிறாராம் லோகேஷ். எனவே, படத்தை வெற்றிப்படமாக்கிவிட வேண்டும் என்கிற முனைப்பில் மிகுந்த கவனத்துடன் வேலை பார்த்து வருகிறாராம்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

1 hour ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

1 hour ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

8 hours ago

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…

11 hours ago

அரசன் படத்துக் கதை இதுதாங்க… சிவகார்த்திகேயன் படத்தோடு சிம்பு மோதுகிறாரா?

நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் அரசன் படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். இதே…

12 hours ago

இயக்குனர் பாரதிராஜா எப்படி இருக்கிறார்?!.. வெளியான போட்டோ!…

பதினாறு வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் பாரதிராஜா. அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி…

1 day ago