கார்த்தி ஆசையில் மண்ணை போட்ட லோகேஷ்.. சூப்பர் ஹீரோவுடன் புது கூட்டணி!..
Lokesh Kanagaraj: தமிழ் சினிமாவில் புதிய விஷயங்களை முயற்சி செய்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவராக மாறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். தற்போது அவருடைய அடுத்த படம் குறித்த சுவாரஸ்ய அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
மாநகரம் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் கைதி2 படத்தை இயக்கினார். இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது. தொடர்ச்சியாக லோகேஷ் இருக்க கோலிவுட்டில் வரவேற்பு குவிந்தது.
நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் அவரை வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்கினார். பல ஆண்டுகள் கழித்து கமலின் மிகப்பெரிய சூப்பர் ஹிட் திரைப்படமாக திரைப்படம் மாறியது. தொடர்ந்து விஜயின் மாஸ்டர் மற்றும் லியோ படங்களை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார்.
தமிழ் சினிமாவின் புதிய கான்செப்டான சினிமாடிக் யுனிவர்சல் தன்னுடைய படங்களில் அறிமுகப்படுத்தினார். ஒரு படத்தின் கதாபாத்திரங்கள் இன்னொரு படத்தில் அமைத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். அந்த வகையில் கைதி, விக்ரம் மற்றும் லியோ திரைப்படங்கள் எல்சியூ என அழைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவர் தற்போது ரஜினிகாந்த் நடித்த வரும் கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிந்த பின் லோகேஷ் கார்த்தி நடிப்பில் கைதி2 திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது லோகேஷின் அடுத்த திரைப்படம் கைதி2 இல்லை என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
லோகேஷ் தன்னுடைய அடுத்த திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகரான ராம்சரணுடன் இணைய இருக்கிறார். தற்போதைய படங்களை முடித்துவிட்டு ராம்சரண் விரைவில் லோகேஷ் உடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குரிய அதிகாரப்பூர்வ அப்டேட்களும் விரைவில் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.