தமிழ்ல புதுசா இருந்துச்சு... பிளடி பெக்கர் படத்தை ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தள்ளிய லோகி...!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:30:12  )

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக இருப்பவர் நடிகர் கவின். விஜய் டிவி மூலமாக தனது சினிமா பயணத்தை தொடங்கிய நடிகர் கவின் சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்து பலரின் மனதை கவர்ந்தார். பின்னர் ஆங்கராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கவின் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் கவினுக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கினர். அந்த வகையில் லிப்ட் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். பின்னர் டாடா என்கின்ற படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு சிறந்த தொடக்கமாக இருந்தது. இந்த படத்தில் காதலன், கணவன், அப்பா என அடுத்தடுத்த கேரக்டர்களின் நடித்து மிகச் சிறப்பாக ஸ்கோர் செய்திருந்தார். டாடா படத்தை தொடர்ந்து ஸ்டார் என்கின்ற திரைப்படத்தில் நடித்தார்.

இப்படமும் கவினுக்கு ஒரு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. தொடர்ந்து நல்ல கதைகள் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் கவின் அறிமுக இயக்குனர் சிவபாலன் இயக்கத்தில் ப்ளடி பெக்கர் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலிப் குமார் தயாரித்திருந்தார். இப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கின்றார் நெல்சன்.

ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் கதையை பொருத்தவரையில் உழைப்பதற்கு சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டு கண்பார்வை தெரியாதது, காது கேட்காதது என பொய் கூறிக்கொண்டு பிச்சை எடுத்து ஏமாற்றி வருகின்றார் கவின். மேலும் தன்னுடன் பெற்றோர்கள் கைவிடப்பட்ட ஒரு சிறுவனையும் வளர்த்து வருகின்றார். ஆடம்பரமான மாளிகை ஒன்றில் ஒரு நாளாவது வாழ்ந்து விட வேண்டும் என்பதுதான் அவரின் ஆசை.

அந்த ஆசை நிறைவேறும் வகையில் ஒரு வாய்ப்பு கிடைக்கின்றது. அதாவது அரண்மனையில் அன்னதானம் போடுவதாக தகவல் வர அங்கு செல்கின்றார். சாப்பிட்டு முடித்த கையுடன் யாருக்கும் தெரியாமல் அந்த அரண்மனைக்குள் நுழைந்து விடுகின்றார். அந்த அரண்மனை அழகைப் பார்த்து மயங்கிய கவின் யாருக்கும் தெரியாமல் அரண்மனையிலேயே தங்குகின்றான். அந்த சமயத்தில் சொத்துக்காக சண்டை வருகின்றது.

அப்போது அந்த அரண்மனை வாரிசுகள் வேறு ஒருவரை ஏற்பாடு செய்து அவனுக்கு சொத்து எழுதி கொடுப்பது போல் கொடுத்துப் பின்னர் வாங்கிவிடலாம் என்று திட்டம் போடுகிறார்கள். அப்போதுதான் கவின் அவர்களின் கண்ணில் படுகின்றான். வாரிசுகளுக்கு சொத்து கிடைக்கின்றதா? இல்லை கவின் அந்த சொத்தை எடுத்துக் கொள்கின்றாரா? என்பது தான் படத்தின் கதை. யாருக்கும் போர் அடிக்காத வகையில் படத்தை மிகச் சிறப்பாக இயக்கி இருக்கின்றார்.

நெல்சன் திலிப் குமாரின் நெருங்கிய நண்பரும் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனருமான லோகேஷ் கனகராஜ் இன்று கவினின் பிளடி பெக்கர் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்தார். படத்தை பார்த்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது 'இந்த திரைப்படம் தனக்கு மிகச் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

ஆங்கிலத்தில் இதுபோன்று நிறைய படங்களை பார்த்திருக்கின்றேன். ஆனால் தமிழில் இது புதுசாக இருந்தது. கவின் மிக சிறப்பாக நடித்திருக்கின்றார். மேலும் இப்படத்தின் மூலமாக என் நண்பன் நெல்சன் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கின்றார்' என்று படம் குறித்து புகழ்ந்து பேசி இருந்தார்.

Next Story