அடுத்த ரெட்ரோ சாங்கா? கூலி படத்தில் இந்த 90’ஸ் பாடலா? சும்மா பிச்சுக்கப் போகுது

Published on: August 8, 2025
---Advertisement---

சமீபத்தில் தான் கூலி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அனிருத் இசையில் ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் கூலி. இந்த படத்தில் ரஜினியுடன் அமீர் கான், சத்யராஜ் ஸ்ருதிஹாசன் ,உபேந்திரா என எண்ணற்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர் .பேன் இந்தியா திரைப்படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது.

படத்தில் பூஜா ஹெக்டே ஒரு பாடலில் நடனமாடி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. படப்பிடிப்பு முற்றிலுமாக முடிந்த நிலையில் படத்தின் பிரீ ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இன்னொரு பக்கம் ரஜினி ,நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜை பொறுத்த வரைக்கும் கைதி படத்தில் இருந்து அவர் எடுக்கும் எல்லா படங்களிலும் 90ஸ் பாடல் ஏதாவது ஒரு காட்சிகளில் இடம் பெற்று ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்து விடும்.

அதுவும் 90கள் காலகட்டத்தில் மிகவும் ஹிட்டான அனைவருக்கும் பிடித்த பாடலை ரீமிக்ஸ் செய்து இப்போது அவர் எடுக்கிற படங்களில் வைப்பதன் மூலம் அதற்கே பெரிய ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். விக்ரம் படத்தில் கூட அந்த ஒரு டெக்னிக்கை பயன்படுத்தி இருப்பார். ஏன் விஜய் நடித்த லியோ திரைப்படத்திலும் கருகரு கருப்பாயி பாடல் பெரிய அளவில் ரீச்சானது.

இந்த நிலையில் கூலி திரைப்படத்திலும் எந்த பாடலை வைக்க போகிறார் என்ற ஒரு ஆர்வம் ரசிகர்களிடையே எழுந்திருக்கின்றன. அது சம்பந்தமான ஒரு செய்தி தான் இப்போது வைரலாகி வருகின்றது. படத்தில் சத்யராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே சத்யராஜ், ரஜினி இவர்களைப் பற்றி சில கிசுகிசுக்கள் வந்த வண்ணம் இருந்தன.

ரஜினி நடிக்கிற படத்தில் சத்யராஜ் நடிக்க மாட்டார் என்று சத்யராஜ் சொன்னதாக பல தகவல்கள் வெளியாகின. இருந்தாலும் நீண்ட வருடங்களுக்கு பிறகு கூலி திரைப்படத்தில் சத்யராஜ் இணைந்து இருப்பது பெரிய ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் சத்யராஜுக்காக லோகேஷ் கனகராஜ் சத்யராஜ் படத்தில் இருந்தே 90ஸ் ஹிட் பாடலை வைத்திருப்பதாக தகவல்கள் சொல்லப்படுகிறது.

coolie

coolie

சத்யராஜ் நக்மா நடிப்பில் கும்தலக்கடி தில்லாலே என்ற பாடல் மிகவும் பிரபலமானது. இதுவரை சத்தியராஜ் ஆடிய நடனத்தில் இந்தப் பாடலில் அவர் ஆடியது கிக் ஏத்தும் விதமாக அமைந்திருக்கும் .பாடல் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை ஃபுல் வைபில் சத்யராஜ் இந்த பாடலில் ஆடி இருப்பார். அந்த பாடலை தான் லோகேஷ் இந்த படத்தில் பயன்படுத்தி இருப்பார் என சொல்லப்படுகிறது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment