Categories: Cinema News latest news

ரஜினியின் பழைய படங்களின் காப்பியா கூலி?!.. லோகேஷ் கனகராஜ் உடைச்சி சொல்லிட்டாரே!…

Coolie: லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் கூலி. ஜெயிலர் சூப்பர் ஹிட்டுக்கு பின் வேட்டையன் படத்தில் நடித்தார் ரஜினி. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே, இப்போது லோகேஷுடன் கை கோர்த்திருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்த படம் வருகிற ஆக்ஸ்டு 14ம் தேதி வெளியாகவுள்ளது. கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ போன்ற படங்களால் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு இயக்குனராக லோகேஷ் மாறியிருக்கிறார். எனவே, இவருக்கென தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

அதேபோல், லோகேஷுடன் ரஜினி இணைந்திருப்பதால் எதிர்பார்ப்பு இன்னும் கூடியிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பே லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக இருந்து அது நடக்காமல் போனது. இப்போது அது கூடி வந்திருக்கிறது. கூலி படம் ஒரு பேன் இண்டியா படமாக உருவாகியுள்ளது.

அதனால் தெலுங்கிலிருந்து நாகார்ஜுனா, கன்னடத்திலிருந்து உபேந்திரா, மலையாளத்திலிருந்து சௌபின் சாஹிர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இதுபோக பல வருடங்களாக ரஜினியுடன் நடிக்காமல் இருந்த சத்தியராஜ் இந்த படத்தில் நடித்திருக்கிறார். மேலும் கமலின் மகள் ஸ்ருதிஹாசனும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த பாடலை டி.ராஜேந்தரும், அனிருந்தும் இணைந்து பாடியுள்ளனர். இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய லோகேஷ் கூலி படம் பற்றி சில முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

ரஜினி சாரின் பழைய படங்களிலிருந்து எந்த காட்சியும் மீண்டும் உருவாக்கப்படவில்லை. ஆனால், சில சிறிய அம்சங்களும், பழைய ரஜினி சார் தோற்றங்களும் முழு படத்திலும் இருக்கும்’ என பேசியிருக்கிறார். மேலும், ரஜினி சார் ஒரு அபாரமான நடிகர். காட்சிகளை எடுக்கும்போது அவரை மிகவும் ரசித்தேன் என சொல்லியிருக்கிறார்.

Published by
சிவா