Logesh: நான் சக்ஸஸ்புல்லா இருக்கேன்னா அது இதனால தான்..? சீக்ரெட் ஃபார்முலாவை பகிர்ந்த லோகி!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:28:56  )

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவில் மோஸ்ட் வான்டட் இயக்குனர் என்கின்ற பெயருடன் வலம் வருகின்றார். லோகேஷ் கனகராஜ் எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் மாநகரம் என்கின்ற திரைப்படத்தை இயக்கிய அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர்.

இந்த திரைப்படத்தின் மூலம் அவர் பேரும் புகழையும் பெற்றதை காட்டிலும் கைதி திரைப்படத்தின் மூலமாகத்தான் மிகச்சிறந்த இயக்குனராக அறியப்பட்டார். இந்த திரைப்படம் அவரது கெரியரில் மிக முக்கிய படமாக அமைந்தது. அதற்கு அடுத்ததாக நடிகர் விஜய் வைத்து மாஸ்டர் என்கின்ற திரைப்படத்தை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்தார் லோகேஷ் கனகராஜ்.

பின்னர் கமலஹாசன் உடன் விக்ரம், அதைத்தொடர்ந்து மீண்டும் விஜயுடன் லியோ உள்ளிட்ட அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தற்போது தமிழ் சினிமாவில் இவரின் இயக்கத்தில் ஒரு படமாவது நடித்து விட வேண்டும் என்ற எண்ணம் தற்போது இருக்கும் பல நடிகர்களுக்கு உள்ளது. தற்போது லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை வைத்து கூலி என்கின்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.

இந்த திரைப்படம் மிகப்பெரிய பொருட்ச அளவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வருகின்றது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து வருகின்றது. மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சௌபின் ஸாஹிர் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்து வருகின்றது.

படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி எடுக்கப்பட்டு வருகின்றன. படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் முடிந்துவிடும் என்றும், விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த லோகேஷ் கனகராஜ் தான் சக்ஸஸ்புல்லான இயக்குனராக இருப்பதற்கான காரணம் குறித்து பகிர்ந்திருந்தார்.

அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: 'சினிமாவில் நான் தற்போது ஒரு சக்சஸ்ஃபுல்லான மேலும் ஒரு பட்ஜெட் பிரண்ட்லியான இயக்குனராக இருக்கிறேன் என்றால் அதற்கு என்னுடைய படம் மேக்கிங் விதம் தான் காரணம். நான் ஒரு காட்சியை அதிக டேக்குகள் எடுக்க மாட்டேன். எனக்கு வேண்டிய காட்சிகளை மட்டும் எடுத்துக் கொள்வேன். மேலும் பல இயக்குனர்கள் ஒரு காட்சியை இரண்டு விதமாக எடுத்து வைத்திருப்பார்.

நான் அப்படி செய்ய மாட்டேன். ஏனென்றால் அது எடிட் செய்யும்போது எதை வைத்துக் கொள்வது என்கின்ற குழப்பம் ஏற்படும். அதனால் எனக்கு என்ன தேவையோ அதை மட்டுமே படமாக்க வேண்டும். எக்ஸ்ட்ரா ஷார்ட் எதுவும் வைத்துக் கொள்ளும் பழக்கம் எனக்கு கிடையாது. அதனால் தான் எனது படங்கள் விரைவில் முடிந்துவிடும். ஒரு திரைப்படத்தை எடுத்து முடிக்க அதிகபட்சம் ஆறு மாதங்கள் மட்டுமே நேரம் எடுத்துக் கொள்வேன்' என்று அந்த பேட்டியில் பகிர்ந்திருக்கின்றார்.

Next Story