Coolie: ரஜினி கேரக்டர் கூலி படத்தில் அப்படி இருக்கும்!.. ஓவர் ஹைப்பா இருக்கே.. லியோ போல ஆகிடுமோ..!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:28:43  )

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற படத்துடன் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இளம் நடிகர்களுக்கு இணையாக தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்த அசத்தி வருகின்றார். தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகி வருகின்றது. சன் பிக்சர் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகின்றது.

மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கின்றார். மிகப்பெரிய பொருட்செலவில் இப்படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகின்றது. அது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் தெலுங்கு, மலையாளம் மொழிகளை சேர்ந்த மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்து வருகின்றனர். அந்த வகையில் கூலி திரைப்படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடிகர் சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் சாகிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கின்றார்கள்.

அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தான் கதையம்சம் இருப்பதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் ரஜினி படமாகவே இருந்தாலும் யாருக்கும் கேமியோ அல்லது ஒரு சில காட்சிகள் மட்டுமே இல்லை. அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இப்படத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல் மற்ற மொழி பிரபலங்களும் இந்த திரைப்படத்தில் நடிப்பதால் தமிழ் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் இப்படம் தொடர்பான எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. மேலும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கிய நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. கூலி திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது முதலே நடிகர் ரஜினிகாந்த் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்தது.

மேலும் சிலர் டீசரில் ரஜினியை பார்க்கும்போது வழக்கமான லோகேஷின் படமாக தான் இருக்கும் என்று கூறி வந்தார்கள். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்தால் லோகேஷ் கனகராஜ் ரஜினியின் கதாபாத்திரம் தொடர்பாக சில தகவலை தெரிவித்து இருந்தார். இது என் வழக்கமான படங்களை போல் இல்லாமல் சற்று வித்தியாசமாக இருக்கும். அதிலும் ரஜினியின் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

ரஜினியை யாருமே இப்படி ஒரு கதாபாத்திரத்தில் பார்த்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு புதுமையான ரோலில் ரஜினிகாந்த் இருப்பார் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருக்கின்றார். இது படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றது.

கூலி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிந்துவிடும் எனவும் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருக்கின்றார். அனேகமாக அடுத்த வருடம் ஆகஸ்டு மாதம் கூலி திரைப்படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.

Next Story