LCU: இங்க தொடங்கி எங்க முடிக்கிறாரு பாருங்கப்பா… எல்சியூவிற்கு மூடுவிழா வைத்த லோகேஷ் கனகராஜ்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:29:06  )

Lokesh kanagaraj: இயக்குனர் லோகேஷ் கனகராஜின் வெற்றி படங்களில் முக்கிய இடம் எல்சியூவிற்குதான். இந்த யூனிவர்ஸை எங்கு தொடங்கி எங்கு முடிப்போம் என அவர் சொல்லி இருக்கும் தகவல் தற்போது வைரலாகி இருக்கிறது.

மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படமே மிகப்பெரிய வெற்றி படைப்பாக அமைந்தது. தொடர்ச்சியாக அவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் கைதி.

கார்த்தி நடிப்பில் வெளியான படம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. இப்படத்தின் தொடக்கம் தான் எல்சியூ என பின்னர் விக்ரம் ரிலீஸின் போது கைதியை பார்த்துவிட்டு தியேட்டர் வர வேண்டும் என இயக்குனராக லோகேஷ் அறிக்கைவிட்டார்.

இந்த அறிக்கையால் ரசிகர்கள் விக்ரம் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கினர். படம் மிகப்பெரிய அளவில் சூப்பர்ஹிட் ஆனது. எல்சியூ என இப்படங்களுக்கு முக்கிய அடைமொழியும் உருவானது. இனி இந்த ஸ்டைலில் உருவாகும் படங்களுக்கு எல்சியூ என போடப்படும் எனவும் கூறி இருந்தனர்.

அதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ எதிர்பார்த்த ரீச் கொடுக்கவில்லை. ஃபிளாஷ்பேக் காட்சிகள் சொதப்பியது. இது படத்தின் வசூலில் கை வைக்கவில்லை என்றாலும் படம் விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

தற்போது லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தின் கைதி படத்தினை இயக்கி வருகிறார். இந்நிலையில் அவர் கொடுத்திருக்கும் பேட்டியில், எல்சியூவில் முதல் படமாக கைதி இருக்கும். கூலி முடிந்த பின்னர் கைதி2 உடனே தொடங்கப்பட்டு விடும். அதற்கான ஸ்கிரிப்ட் எழுதப்பட்டு விட்டது.

விக்ரம் படம் எல்சியூவின் பிரம்மாண்ட எண்ட் கார்டாக இருக்கும். எல்சியூவின் எல்லா கேரக்டர்களும் இருக்கும். இதற்கிடையில் ரோலக்ஸ் தனி படமாக வெளியாகும். அதில் ரோலக்ஸ் குறித்த முழு தகவல்களும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Next Story