பைட் சீன்ல சாங் பேக்ரவுண்டு... லோகி எங்கேருந்து கொண்டு வந்துருக்காரு பாருங்க...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:37:56  )

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படங்கள் எல்லாமே வெறித்தனமான பைட்டுகள் இருக்கும். அதற்குப் பின்னாடி சாங் பேக்ரவுண்டு இருக்கும். அந்த வகையில் கைதி, மாஸ்டர், விக்ரம்னு சொல்லிக்கிட்டே போகலாம். கூலில கூட 'டி ஐ எஸ்சிஓ டிஸ்கோ... டிஸ்கோ'ன்னு பாடல் வருது.அது இளைஞர்களை ரொம்பவே கவர்ந்து இழுக்கிறது.

அவர் அப்படி ஒரு புது டிரெண்ட்செட்டைக் கொண்டு வந்துள்ளார். அது எப்படி வந்ததுன்னு அவரே சொல்றார் பாருங்க. பொதுவா சண்டைன்னாலே அது நடைமுறையில அதிகமா நாம சந்திக்காத விஷயம். அது ஆர்ட்ல கொண்டு வரும்போது இன்ட்ரஸ்டிங்கா இருக்கணும். அநியாயத்தைக் கண்டு பொங்கி எழணும்னு பண்றாங்க.

நம்மால செய்ய முடியாததை திரையில ஒருத்தர் செய்றாருங்கற போது ஒரு ஆர்வம் வருது. அதை உன்னிப்பாக் கவனிக்கிறாங்க. பழைய காலத்துல நாலு பைட், நாலு சாங் வச்சி நிறைய படம் வரும். அப்போ முதல் பைட்ல அடிக்கிறவங்க தான் கடைசி வரைக்கும் அடியாளா வருவாங்க. அதை இப்போ கொண்டு வர முடியாது. இப்போ எல்லாரும் உன்னிப்பா கவனிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

ஸ்டண்ட் வருவதற்கு ஏதாவது ஒரு எமோஷன் வேணும். கைதில ஜிமிக்கி உடையற விஷயம். மாஸ்டர்ல லட்டர் கிழிpயிற சீன் தான். அது தான் எமோஷனாகுது. நான் சின்ன வயசுல பாட்டி ஞாபகார்த்தமா தந்த ஒரு பொருளைத் தான் பேண்ட் பாக்கெட்ல வச்சிருப்பேன்.

அது மூலமா நல்லது நடக்குதோ இல்லையோ தெரியாது. அது ஒரு அன்பை வெளிக்காட்டுற விஷயம். எக்ஸாம் எழுதப் போகும்போது கூட வச்சிருப்பேன். வளர்ந்ததுக்கு அப்புறம் பார்த்தா சிரிக்கக்கூடத் தோணும். இப்படி எல்லாம் பண்ணினோமான்னு. அவ்வளவு தான் ஹியூமன் எமோஷன்.

அதைத் தூக்கித் தான் பைட்ல வைக்கப் பார்ப்பேன். அதை எவ்வளவு தூரம் இன்ட்ரஸ்ட்டா கொண்டு வரலாம்னு பார்ப்பேன். ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் எவ்வளவு தூரம் உயிரைப் பணயம் வச்சி பைட் பண்றாங்கன்னு பார்க்கும்போது அதைப் பேப்பர்ல அதுக்கான எமோஷனைக் கொண்டு வரணும்னு பார்ப்பேன் என்கிறார் லோகேஷ்.

களம் என்ற குறும்படத்தை எடுக்கும்போது அவருடன் பேங்க்ல வேலை செய்த சில பசங்க தான் ஸ்டண்ட் கோரியோகிராபி பண்ணினாங்களாம். அப்போ ஹரிவராசனம் சாங் பேக்ரவுண்டுல வரும். ஊமை விழிகள் படத்துல அருண்பாண்டியன் சார் கீழே வந்த உடனே ரோட்ல ஒரு பைட் இருக்கும்.

அப்போ பக்கத்துல ரோட்ல வாசிக்கிறவங்க உட்கார்ந்துருப்பாங்க. ஒரு 1 ரூபாய் காயின எடுத்து அதுல போட்டுட்டு வாசின்னு சொல்வாரு. அவங்க எடுத்துத் தட்டுல தட்ட ஆரம்பிப்பாங்க. அதுக்கு பைட் ஒண்ணு கம்போஸ் நடக்கும். அதைத் தான் நான் கொண்டு வரப் பார்க்கிறேன். ஸ்டண்டைப் பொருத்தவரைக்கும் சேலஞ்சர்ஸ் தான் ஜாஸ்தி என்கிறார் லோகேஷ் கனகராஜ்.

Next Story