Categories: latest news

ஓவர் பிஸியில் இருக்கும் போது இது தேவையா? லோகேஷ் கனகராஜ் முடிவால் கடுப்பில் ரஜினி ரசிகர்கள்…

Lokesh Kanagaraj: பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தின் ரிலீஸ் நெருங்கி கொண்டு இருக்கிறது. இந்நிலையில் திடீரென லோகேஷ் முடிவு ரஜினி ரசிகர்களுக்கு கடுப்பை கிளப்பி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் தான் 10 படம் மட்டுமே இயக்குவேன் என லோகேஷ் கனகராஜ் அறிவித்து இருந்தார். முதல் முறையாக அவர் இயக்கத்தில் வெளியான மாநகரம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதை தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி படத்தினை இயக்கினார். படம் தாறுமாறு ஹிட் அடித்தது. இதனால் லோகேஷிற்கு பிடித்த நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்க முடிவெடுத்தார். இதையடுத்து அப்படமும் கமல் கேரியரையே மாற்றியது.

படம் பெரிய அளவில் வசூல் குவித்தது. தொடர்ந்து விஜயை வைத்து மாஸ்டர், லியோ படங்களை இயக்கினார். இதையடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்தினை இயக்கி வருகிறார். படத்தில் ஏகப்பட்ட பிரபலங்கள் இணைந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஜெயிலர் படத்தினை போல இப்படத்திற்கு பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் நிலவி வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் இப்படத்தின் வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து லோகேஷ் கைதி2, அமீர்கானுடன் ஒரு படம் உள்ளிட்ட நான்கு படங்களை இயக்க இருக்கிறார்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக ஒரு படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்படத்தினை கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

தற்போது கூலி வேலைகள் நடந்து வரும் நிலையிலும் லோகேஷ் கனகராஜ் பேங்காக் சென்று இருக்கிறார். அங்கு படத்தின் ஸ்க்ரிப்ட் பணிகளை அருண் மாதேஸ்வரனுடன் லோகேஷ் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இப்படத்தினை பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

7 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

7 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

14 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

15 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

16 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago