காதலர் தினத்தில் வெளியாகும் படங்கள்... எல்லாமே தீயால்ல இருக்கு!

by sankaran v |
காதலர் தினத்தில் வெளியாகும் படங்கள்... எல்லாமே தீயால்ல இருக்கு!
X

ஆண்டுதோறும் காதலர் தினம் என்றாலே இளசுகளுக்குக் கொண்டாட்டம்தான். அவர்கள் ஜாலியாக பைக்கில் பீச், பார்க், தியேட்டர்னு சுற்ற ஆரம்பிச்சிடுவாங்க. அதே போல மகாபலிபுரம் போன்ற சுற்றுலாதலங்களில் பார்க்கும் இடம் எல்லாம் காதலர்களாகவே காட்சி அளிப்பார்கள். அந்தக் காலத்தில் காதலர்கள் பெரியவர்களைப் பார்த்து ஒதுங்குவார்கள்.

இன்று நிலைமை தலைகீழாக உள்ளதை நாமே பார்த்திருப்போம். நிஜ காதல் எந்த நிலையில் உள்ளது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தமிழ்சினிமாவும் தன் பங்குக்கு போட்டி போட்டுக் கொண்டு காதலர் தினத்தன்று படங்களை வெளியிடுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு என்னென்ன படங்கள் ரிலீஸ்னு பார்க்கலாமா...

FIRE (தீ): இது ஒரு கிரைம் த்ரில்லர் படம். ஜேஎஸ்கே. தயாரித்து இயக்கியுள்ளார். பாலாஜி முருகதாஸ், சாந்தினி தமிழரசன், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சிங்கம்புலி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். டிகே இசை அமைத்துள்ளார்.

படாவா: நந்தா கேவி இயக்கத்தில் வெளியாக உள்ள படம் படாவா. ஜான் பீட்டர் இசை அமைத்துள்ளார். தயாரிப்பாளரும் இவர்தான். விமல், சூரி முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

காதல் என்பது பொது உடமை: ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாக உள்ள படம் காதல் என்பது பொது உடமை. லிஜோமோல் ஜோஸ், அனுஷா பிரபு, ரோகிணி, தீபா சங்கர், வினீத் உள்பட பலர் நடித்துள்ளனர். கண்ணன் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

நடிகர் வினீத் நீண்ட நாள்களுக்குப் பிறகு நடித்துள்ள படம் இது. தமிழில் இவர் நடித்த ஜென்டில்மேன், புதிய முகம், ஜாதி மல்லி, மே மாதம், காதல் தேசம் படங்கள் சூப்பர்ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்துடன் சந்திரமுகியில் நடித்தார். 6வயதிலேயே பரதநாட்டியம் கற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மலையாளப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

Next Story