மீண்டும் இந்தியில் மொக்கை வாங்கிய தமிழ் ரீமேக்… லவ் டுடே ரீமேக் வசூல் இவ்வளவு தானா?

by ராம் சுதன் |

Love today: தமிழ் சினிமாவின் லவ் டுடே திரைப்படம் இந்தியில் மிகப்பெரிய அளவில் ரீமேக் செய்யப்பட எதிர்பார்த்த அளவு வசூல் கிடைக்காமல் மீண்டும் தமிழ் திரைப்படம் இந்தியில் பல்ப் வாங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழில் மிகப்பெரிய அளவில் தற்போது சூப்பர்ஹிட் படங்கள் வெளியானது. அந்த ஹிட் படங்களை தற்போது தொடர்ச்சியாக பாலிவுட்டில் ரீமேக் செய்து வருகின்றனர். இருந்தும் இந்தி டூ தமிழ் ரீமேக் படங்கள் சமீபத்திய காலமாக பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

கடந்தாண்டு அட்லீ இயக்கத்தில் சூப்பர்ஹிட் அடித்த தெறி திரைப்படத்தினை இந்தியில் பேபி ஜான் என்று ரீமேக் செய்தனர். இந்தியில் இயக்குனர் அட்லீயே தயாரித்தார். பல கோடி லாபம் எடுக்கலாம் என்ற ஐடியாவில் அவர் தொடங்க படம் படு தோல்வி அடைந்தது.

வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் படத்திற்கு வரவேற்பு கிடைத்தாலும் வசூல் செம அடி வாங்கியது. இதை தொடர்ந்து தற்போது தமிழில் சூப்பர் ஹிட் அடித்த லவ் டுடே படத்தினை இந்தியில் ரீமேக் செய்தனர். லவ்யபா என்ற பெயரில் உருவாகி இருக்கும் படத்தினை அத்வைத் சந்திரன் இயக்கி இருக்கிறார்.

இப்படத்தின் ஹீரோவாக அமீர்கானின் மகன் ஜூனைத் கானும், ஹீரோயினாக போனி கபூர் - ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூரும் நடித்துள்ளனர். வாரிசு படங்கள் தற்போது இந்தி ரசிகர்களுக்கு பெரிய கடுப்பை சந்தித்து இருக்கிறது. அந்த வகையில் இப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.

ஹீரோவாக ஜூனைத் கான் ஹிட்டடித்தாலும் நடிப்பில் அசத்திய ஸ்ரீதேவியின் மகள் குஷி கோட்டை விட்டு இருக்கிறார். 60 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் வெறும் 1.25 கோடி வசூலை மட்டுமே குவித்துள்ளது. இப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் அடித்தால் புகைப்பிடிப்பதை வேறு நிறுத்துவேன் என அமீர்கான் வாக்கு கொடுத்து பல்ப் வாங்கி விட்டார்.

Next Story