Categories: Cinema News

தனுஷ், விஜயை ஓரம்கட்டிய லப்பர்பந்து.. தமிழ்நாட்டில் செய்த உச்சபட்ச சாதனை…

Lubberpanthu: கடந்த சில வருடங்களாகவே சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த லிஸ்ட்டில் தற்போது முக்கிய இடம் பிடித்துள்ளது லப்பர்பந்து.

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் லப்பர்பந்து. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ், சஞ்சனா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். முதலில் இப்படத்துக்கு ஜப்பான் என பெயர் வைக்கப்பட்டது.

ஆனால் அந்த சமயத்தில் கார்த்தியின் திரைப்படம் வந்ததை அடுத்தே படத்துக்கு லப்பர் பந்து என பெயர் வைக்கப்பட்டது. முதலில் கெத்து கேரக்டருக்கு நட்ராஜ் உள்ளிட்டோரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் தினேஷ் இப்படத்தில் முடிவாகினார்.

அதுபோல ஹரிஷ் கல்யாண் வேடத்திற்கும் பல பரிசீலிக்கப்பட்டது. ஆனால் அவர்களும் ஒப்புக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. முதலில் ஹரிஷ் கல்யாண் படமாக வெளியான இப்படம் தினேஷுக்கு மிகப்பெரிய அளவில் பெயர் கிடைத்தது.

அதிலும் கேப்டன் விஜயகாந்தின் பாடலான பொட்டு வச்ச தங்க குடம் பாடல் ஹிட்டடித்தது. படம் முதல் வாரத்தில் இருந்தே ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தினை குவித்தது. இரண்டு வாரங்களை கடந்தும் படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிவருகிறது.

பெரிய பட்ஜெட் இல்லாமல் கேமியோக்கள் இல்லாமல் லப்பர்பந்து திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி இருக்கிறது. கிட்டத்தட்ட இப்படம் ஒரு மாதத்தினை கடந்து இருக்கும் நிலையில் படம் 40 கோடி வசூலை பெற்றுள்ளது. இது தமிழ் சினிமாவில் மாபெரும் சாதனை என்றே கூறப்படுகிறது.

லப்பர்பந்து திரைப்படம் ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தள்ளிப்போய் இருக்கிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ், விஜய் உள்ளிட்டோரின் பிரம்மாண்ட படங்களுக்கு கூட இவ்வளவு வசூல் சாதனை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
ராம் சுதன்