ரஜினி படத்தை அடித்த லப்பர் பந்து வசூல்…இது என்னடா சூப்பர்ஸ்டாருக்கு வந்த சோதனை…

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:33:53  )

Lubberpanthu: மிகப்பெரிய நட்சத்திர கூட்டம் இல்லாமல் பெரிய அளவில் ப்ரோமோஷன் இல்லாமல் வெளியான ரப்பர் பந்த திரைப்படம் தொடர்ச்சியாக வசூல் குறித்து வரும் நிலையில் ரஜினிகாந்த் திரைப்படத்தின் வசூலை அடித்திருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் ரசிகர்கள் எவ்வளவு பெரிய நட்சத்திரம் இருந்தாலும் படத்தின் கதையை மட்டுமே கூர்ந்து கவனிக்க தொடங்கி இருக்கின்றனர். அதனால் தான் சமீபத்திய காலமாக பெரிய நட்சத்திரங்கள் திரைப்படம் கூட விமர்சனத்தில் மோசமாக அடி வாங்குகிறது.

கமல்ஹாசனின் மிகப்பெரிய வெற்றி திரைப்படமான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் யாருமே எதிர்பார்க்காத வகையில் உச்சகட்டமாக நெகட்டிவ் விமர்சனங்களை குவித்தது. அது மட்டுமல்லாமல் ரஜினிகாந்த் நடிப்பில் அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படமும் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது.

உச்ச நட்சத்திரங்களின் படங்களை பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் எந்த வித பெரிய பிரம்மாண்டமும் இல்லாமல் சாதாரண நாயகர்களுடன் வெளியான லப்பர் பந்து பலரை வியக்க வைத்திருக்கிறது. தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தினேஷ், ஹரிஷ் கல்யாண் இணைந்து நடித்த திரைப்படம் கிரிக்கெட் வீரர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது.

சாதாரணமாக சொல்லப்பட்ட இக்கதை பல வாரங்களை தாண்டியும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. படம் வெளியாகி ஏழு வாரங்களை கடந்தும் இன்னும் ஓடிடியில் கூட ரிலீஸ் செய்யப்படவில்லை. வரும் தீபாவளி தினத்தை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் வசூல் தமிழ்நாட்டில் மட்டும் 43 கோடி எனக் கூறப்படுகிறது. ஆனால் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படத்தின் தமிழ்நாட்டு வசூல் வெறும் 42 கோடி தான். இதில் கமல்ஹாசன் லப்பர் பந்திடம் தோல்வியே அடைந்திருக்கிறார்.

இது ஒரு புறம் இருக்க, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லால் சலாம் திரைப்படம் உலகம் முழுவதும் 17.4 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது. லப்பர் பந்து படத்தின் பாதி வசூலை கூட லால் சலாமால் தாண்ட முடியாதது பலருக்கு ஆச்சரியம் அளித்திருக்கிறது. இன்னும் திரைப்படம் ஓடிடியில் கூட விலை போகாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story